புதுதில்லி, பிப்.27-
நதி நீர் இணைப்பு திட்டத் திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியள்ளது. இது தொடர் பான மனு திங்களன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந் தது. மனுவை விசா ரித்த நீதிபதி கள் நதிநீர் இணைப்பு திட்டத் திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் திட்டத்தை குறிப்பிட்ட காலத் தில் செயல்படுத்தவும் உத் தரவிட்டுள்ளனர். அதே நேரத் தில் இதை கண்காணிக்க உயர் மட்ட குழு ஒன்றை அமைக் கவும் ஆணையிடப்பட்டுள் ளது. நதிநீர் இணைப்பு விவகா ரத்தில் மத்திய-மாநில அரசுகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும் என் றும் மனு மீதான உத்தரவில் உச்சநீதிமன்றம் கேட் டுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி எஸ்.எச். கபாடியா தலை மையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இது தொடர் பான வழக்கு விசாரணைக்கு வந் தது. நதிகள் இணைப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்படும் குழுவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நீர்வளத்துறை செய லாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், நீர்வள அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்ட கமிஷன் மற்றும் வன அமைச்சகம் ஆகியவற்றின் சார் பில் 4 நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்றும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளும், 2 சமூக ஆர்வலர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

Leave A Reply