சென்னை, பிப்.27-
வழக்கமாக தமிழ்நாட் டில் ஜனவரி மாதத்தில் பனிப் பொழிவு மாறி சாதா ரண வானிலை நிலவும். ஆனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 மாதங் களாக இரவிலும், அதி காலை நேரத்திலும் கடுமை யான பனிப் பொழிவு காணப் படுகிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிரே வருவது தெரியாத அளவு அதிகாலையில் பனிமூட் டம் காணப்பட்டது. இது போல தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் பனி யின் தாக்கம் அதிகமாக உள் ளது.
மலைப்பகுதிகளில் தின மும் பனிமூட்டம் நிலவுகி றது. தொடர்ந்து பனி இருந் தாலும் பகல் வேளையில் கடும் வெயில் காணப்படு கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது:
வழக்கமாக ஜனவரி மாத தொடக்கத்தில் பனிப் பொழிவு நீங்கிவிடும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாத இறுதியிலும் பனிப்பொழிவு உள்ளது. பகலில் நல்ல வெயில் அடிக் கிறது.
ஒரே நாளில் அதிக குளிர், அதிக வெப்பம் நிலவு வதற்கு தெளிவான வானி லையே காரணம். மேகம் இல்லாத வானம் இருப்ப தால் இந்த நிலை உருவா கிறது.
இப்போதைய பனிப் பொழிவு மேலும் சில வாரங் களுக்கு நீடிக்க வாய்ப்புள் ளது. அதன் பிறகு வானிலை மாறும். கோடைகாலம் வழக் கம் போல ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிவிடும். அதன் பிறகு பனிப்பொழிவு மாறிவிடும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: