மதுரை,பிப்.27-
மதுரையில் நகைப்பட் டறை தொழில் செய்த சர வணக்குமார் என்பவரை காவல்நிலையத்தில் வைத் துத் தாக்கி மரணமடையச் செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த காவல்நிலைய மரணத் திற்குக் காரணமான காவல் துறை ஆய்வாளர் உள் ளிட்ட காவலர்களை பணி யிடை நீக்கம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயற் குழுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் பா. விக்ரமன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதி ராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நன்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
மதுரை தெற்குமாசி வீதி பச்சரிசிகாரத் தெருவில் நகைப்பட்டறை தொழில் செய்து வந்த ஏ.சரவணக் குமார் என்பவர் கடந்த 16 ம் தேதி முதல் காணாமல் போன சூழ்நிலையில், 18 ம் தேதி அதிகாலை 4 மணியள வில் 6 சீருடை இல்லாத காவல்துறையினர் சரவணக் குமாரை அழைக்குக் கொண்டு அவரது வீட்டுக் குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர். பிரோவி லிருந்த இடப்பத்திரங்கள், 5 பவுன்நகை, பாஸ்புக் ஆகிய வற்றைக் கையகப்படுத்திக் கொண்டதுடன், சரவணக் குமாரின் தந்தை ஆறுமுகம், அவரது மனைவி கலா ராணி, அவரது குழந்தைகள் சந்தானலட்சுமி, சதீஷ் ஆகியோரை திலகர்திடல் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சீனிவா சன் உள்ளிட்ட காவலர்கள் மிரட்டியதுடன், உங்களை விடுவிக்க வேண்டுமென் றால் 3 லட்சம் ரூபாய் தர வேண்டுமென கூறியுள்ள னர். இரவு 10 மணி வரை அவர்களை சட்டவிரோத காவலில் வைத்திருந்த ஆய் வாளர் சீனிவாசன், பணம் கொண்டு வருகிறேன் என சொன்ன சரவணக்குமாரின் மனைவி மற்றும் குழந்தை களை மட்டும் வெளியே அனுப்பியுள்ளார். அவர் அடுத்த நாள் தனது நகை, குழந்தைகள் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சரவணக் குமாரின் தந்தை ஆறுமுகத் திடம் 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட சட்டம் – ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர், சரவணக்குமாரின் தந்தை ஆறுமுகத்தை மட்டும் அனுப்பியுள்ளார். மொத்தம் 3 லட்சம் ரூபாயை சர வணக்குமார் குடும்பத்தின ரிடம் மிரட்டி பெற்றுள்ள னர். இந்தச் சூழ்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட் டுள்ள சரவணக்குமார் உடல் நலம் மோசமடைந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் அவசர சிகிச் சை பிரிவில் அனுமதித்துள் ளனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்காமல் மதுரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் அவ சர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்ட சரவணக் குமார் உயிரிழந்துள்ளார். சட்டம் – ஒழுங்கை பரா மரிக்கக்கூடிய ஒரு ஆய் வாளர், சம்பந்தமில்லாமல் கிரைம் வழக்கில் தலை யிட்டதன் காரணம் என்ன?
எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், நகைப்பட்டறை தொழி லாளி ஒருவரை சட்ட விரோதமாக கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து மரண மடையச் செய்த திலகர் திடல் காவல்நிலைய ஆய் வாளர் சீனிவாசன் உள் ளிட்ட காவலர்களை தமி ழக அரசு உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண் டும். இவ்வழக்கை சிபி சிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் உயிரி ழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சரவணக் குமாரின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு வலி யுறுத்தி கேட்டுக்கொள் கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: