திருப்பூர், பிப்.27-
திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்
சிக்குட்பட்ட சந்திராபுரம், பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மது
பானக்கடை (எண் 1898) செயல்பட்டு வருகிறது. இரு பள்ளிகள், ஏராள
மான வீடுகள், தொழிற்
சாலைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. இங்
குள்ள மதுபானக்கடை காரணமாக இந்த வட்டார மக்கள் பல்வேறு பாதிப்பு
களைச் சந்தித்து வந்துள்
ளனர். குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபடு
வதாலும், அரைகுறை ஆடைகளுடன் விழுந்து கிடப்பதாலும் பள்ளி மாணவர்கள், பெண்கள் ஆகியோர் முகம் சுழிக்கும் நிலையில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்
ளது. இதையடுத்து இந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி
யினர் வலியுறுத்தினர்.
அதன்படி கடந்த ஒன்
றரை மாதத்துக்கு முன்னர் இந்த மதுபானக்கடை மூடப்பட்டது. இந்நிலை
யில், ஞாயிறன்று இரவு திடீரென இந்த மதுபானக்
கடை மீண்டும் திறக்கப்
பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதி
ருப்தியடைந்தனர். மீண்
டும் பழையநிலை தொடர்ந்
ததால் ஆவேசமடைந்த அப்பகுதியினர், திங்க
ளன்று காலை திருப்பூர் தாராபுரம் சாலையில் மறி
யலில் ஈடுபட்டனர்.
நல்லூர் நகராட்சி முன்
னாள் துணைத் தலைவர் காட்டே ராமசாமி, ஏ.ஐ.
டி.யூ.சி. பொது தொழிலா
ளர் சங்கப் பொதுச் செய
லாளர் சேகர் ஆகியோர் தலைமையில் அப்பகுதி
யினர் 150க்கும் மேற்பட்
டோர் மறியலில் ஈடுபட்ட
னர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவ
ரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்
பகுதியினர் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் ஒரு தனி
யார் பள்ளி, ஒரு அரசு பள்ளி என 2 பள்ளிகள் உள்ளது. மிக நெருக்கமான குடியிருப்பு பகுதியான இங்கு மதுபானக்கடை அமைத்துள்ளதால் நாங்
கள் மிகுந்த பாதிப்புக்குள்
ளாகியுள்ளோம். தொடர்ச்
சியாக பாதிப்புகளை சந்
தித்து வந்ததையடுத்து, ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டு இந்த மதுபா
னக்கடையை மூட வைத்
தோம். தற்போது மீண்டும் திறந்துள்ளனர். இது சரி
யானது அல்ல. மீண்டும் டாஸ்மாக் கடையை மூடா
விட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்
படும்,’’ என்றனர்.
மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக அந்த டாஸ்மாக் மதுபா
னக்கடை மூடப்படும் என உறுதி கூறப்பட்டதை
யடுத்து மறியல் போராட்
டம் கைவிடப்பட்டது. ஆனால் டாஸ்மாக் மது
பானக்கடை மூடப்பட
வில்லை. இதனால் பொது
மக்கள் ஆவேசமடைந்
தனர்.
இது தொடர்பாக ஆட்சியர், காவல் கண்
காணிப்பாளரிடம் மீண்
டும் முறையிடுவது என்
றும் அதன் பின்னரும் டாஸ்மாக் கடை மூடப்
படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடு
வது என்றும் அப்பகுதியி
னர் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: