திருப்பூர், பிப். 27-
திருப்பூரில் பனியன் கம்பெனிகளுக்கு தொழி
லாளர்களை ஏற்றி வரும் பேருந்துகளின் அதிவேகத்
தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்
துவதுடன், அவற்றை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறி
யலில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த முதலி
பாளையத்தில் ஆயிரக்
கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி
யில் அரசு உயர்நிலைப்
பள்ளி ஒன்றும் செயல்
பட்டு வருகிறது. இந்
நிலையில், முதலிபாளை
யம் சிட்கோ தொழிற்
பேட்டையில் உள்ள பனி
யன் தொழிற்சாலைகளு
க்கு தேவையான தொழி
லாளர்களை சுற்றுவட்டா
ரங்களில் இருந்து அழைத்து வருவதற்கு பல பனியன் கம்பெனி உரிமையாளர்
கள் சொந்தமாகவே பேருந்
துகள் வைத்திருக்கின்ற
னர்.
இப்பேருந்துகளில் சுற்று வட்டாரத்தில் பகுதி
லிருந்து தொழிலாளர்
களை அழைத்து, மீண்டும் அந்த ஊர்களுக்குச் சென்று, விட்டு வருகின்றனர். இப்
பனியன் கம்பெனிகளில் வேலை நேரம் தொடங்
கும் முன், அதாவது காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அசுர வேகத்தில் இப்பேருந்து
கள் இயக்கப்படுகின்றன.
இப்பேருந்துகளை குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக காலை நேரங்களில் பள்ளி
க்குச் செல்லும் மாணவ, மாணவிகள், இதர தொழி
லாளர்கள் உள்ளிட்டோர் அதிகமாக பயணம் செய்
யும் சாலையில் நெருக்
கடியையும் பொருட்படுத்
தாது மிக விரைவாக ஓட்டிச் செல்கின்றனர். அவசரம் மற்றும் அலட்சி
யம் காரணமாக அசுர வேகத்தில் ஓட்டப்படும் இந்த பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, விபத்துக்
களைத் தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முறை
யிட்டு வருகின்றனர்.
எனினும் இப்பேருந்து
களின் தாமதத்தால் எக்கார
ணம் கொண்டும் தொழி
லாளர்களின் உற்பத்தி நேரம் குறைந்துவிடக் கூடாது என்பதில் கம்
பெனி நிர்வாகங்கள் கவன
மாக இருக்கின்றன. இதற்
காக, தனியார் நிறுவனங்
களின் பேருந்துகளில் வேகத்தை கட்டுப்படுத்தி, நேரத்தை ஒழுங்குபடுத்து
வதில் சம்பந்தப்பட்ட கம்பெனி உரிமையாளர்
கள் உரிய கவனம் செலுத்
தாமல் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தி வரு
கின்றனர்.
எனவே இப்பகுதிகளில் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் கடும் அதிருப்தி
யடைந்த அப்பகுதி மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்
டோர் திங்களன்று அவ்
வழியாக இயக்கப்பட்ட தனியார் தொழிற்சாலை பேருந்துகளை சிறை
பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அப்
பகுதியினர் கூறுகையில், ‘‘எங்கள் ஊரில் பள்ளிக்
கூடம், அலுவலகங்கள், குடியிருப்புகள் அமைந்
துள்ளன. இந்த வழியாக தினமும் தனியார் தொழிற்
சாலை நிறுவன பேருந்து
கள் அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன. இத
னால் தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வரு
கின்றன. விபத்து உயிரிழப்
புகளும் நடந்து வருகின்
றன. பலமுறை கூறியும், அதிவேகத்தில் பயணிப்
பதையே அவர்கள் வழக்க
மாக கொண்டுள்ளனர். இனிமேல் இந்த பேருந்து
கள் இந்த சாலை வழியாக இயக்கக் கூடாது. மாற்றுப்
பாதையில் இயக்க நடவ
டிக்கை எடுக்க வேண்
டும்,’’ என வலியுறுத்தினர்.
இம்மறியல் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் ஊரகக் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்
சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் தனியார் தொழிற்சாலை நிறுவன பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை
யடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவி
நாசி சேவூர் சாலையிலும் தனியார் பனியன் நிறுவன வாகனங்களின் அசுர வேகத்துக்கு எதிராக சிறைபிடிப்புப் போராட்
டம் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.