திருப்பூர், பிப். 27-
மத்திய அரசின் தாரா
ளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக பிப்ரவரி 28ம் தேதி நாடு தழுவிய பொதுவேலை
நிறுத்தத்தில் திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கமும் பங்கேற்கிறது.
இச்சங்கத்தின் நிர்வா
கக் கமிட்டிக் கூட்டம் சங்
கத்தலைவர் ஜி.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்
றது. இதில் செயலாளர் பி.பாலன், சிஐடியு மாவட்
டத் துணைத் தலைவர் என்.ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பத்து அம்சக் கோரிக்
கைகளை வலியுறுத்தி நடை
பெறும் பொது வேலை
நிறுத்தத்தில் திருப்பூரின் அனைத்து சாலையோர வியாபாரிகளும் பங்கேற்ப
தென்று முடிவு செய்யப்
பட்டது. குறிப்பாக மத்திய அரசு சில்லரை வர்த்தகத்
தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முயற்சிப்பது நாசகர விளைவை ஏற்படுத்
தும் என்பதால் அதை எதிர்த்து சாலையோர சிறு வியாபாரிகள் மத்திய அர
சுக்கு கண்டனம் தெரிவிக்
கும் விதத்தில் இப்போராட்
டத்தில் பங்கேற்பர். செவ்
வாயன்று காலை திருப்பூர் குமரன் சிலையில் அனைத்
துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்
பாட்டத்திலும் சாலையோர
வியாபாரிகள் கலந்துகொள்
வர் என நிர்வாக கமிட்டி
முடிவு செய்துள்ளது.
தையல் கலைஞர்கள் முடிவு
அதேபோல் திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்
கள் சங்கமும் இந்த வேலை
நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்
ளது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், தையல் கலைஞர்கள் சம்
மேளனத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வேலுச்
சாமி, சங்கச் செயலாளர் பி.பாலன் ஆகியோர் தையல் கலைஞர்கள் சங்க நிர்வா
கக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக் கூட்டத்
தில் பிப்ரவரி 28 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய தீர்
மானிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: