சிதம்பரம், பிப். 27-
தானே புயலின் அறு வடை என்ற ஆவணப்படத்தை சிதம்பரம் சட்ட மன்ற உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் லேனா திரையரங் கில் ஞாயிறன்று (பிப்.26) துவக்கி வைத்தார்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தானே புயல் கடுமையாக தாக்கியது. நெல், கரும்பு, வாழை,மணிலா போன்ற பயிர்கள் கடுமையாக சேத மடைந்தன. பலா,முந்திரி மரங்களும் வேரோடு விழுந் தன. பாதித்த அனைத்து பகுதிகளுக்கும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நேரில் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு பாதித்துள்ளது, புயலுக்கு பின்னர் அவர் களின் வாழ்க்கை எந்த நிலை க்கு சென்றுள்ளது என் பதை நேரில் ஆய்வு செய்து படமாக்கியுள்ளார்.
35 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை கட லூரில் உள்ள கிருஷ்ணா லாயா திரையரங்கில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி அன்று இயக்குநர் தங்கர் பச்சான் மக்க ளுடன் சேர்ந்து பார்த்தார். பின்னர் பிப்ரவரி 26 ந்தேதி சிதம் பரத்தில் உள்ள லேனா திரையரங்கில் இப்படத்தை திரையிட்டார். இப்பட த்தை சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. பால கிருஷ் ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தானே புயல் பற்றி அரசு தான் ஆவண படம் எடுக்க வேண்டும். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வில்லை. உங்களுக்கு ஆவணப்படம் எடுக்க தோன்றியது பாரட் டுக்குரியது’’ என்று தங்கர் பச்சானை பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய தங்கர் பச் சான் கூறியதாவது:
தானே புயலால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரம் நிலை குலைந்துள்ளது. சுனாமி பேரலை தாக்கிய போது பல தொண்டுநிறுவனங்கள் உதவி செய்தன. ஆனால் தானே புயலால் பாதித்த மக் களுக்கு யாரும் உதவி செய் யவில்லை. மா, பலா, தென்னை போன்ற மரங் களை உருவாக்க இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆகும். இனிமேல் மரத்தை யார் உருவாக்குவார்கள் என்று கவலை உள்ளது. 2 லட்சம் மரக்கன்று கொடுத் தால் மட்டும் போதாது. தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கணும்.
தானே புயல் பற்றி பக் கத்து மாவட்டத்திற்கே தெரியவில்லை. தானே புயல் பாதித்த மக்களின் வாழ் நிலை உலக மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காக 42 நாள் இரவு பகல் பாராமல் இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளேன். தமிழ் நாட்டில் எல்லா திரைய ரங்குகளில் வாரம் இரண்டு நாள் இலவசமாக இப் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ந்தேதி தானே புயல் பற்றியும் தானே புயல் ஆவணப்படம் குறித்து 10 நிமிடம் பேச தமிழக முதல் வரிடம் அனுமதி வேண்டி கடிதம் எழுதினேன். ஆனால் இன்று வரை பதில் இல்லை. இதே போல் இந் திய பிரதமர் மன் மோகன் சிங், மற்றும் சோனியா காந்தி,ராகுல் காந்தி, மத்திய மூத்த அமைச்சர் 13 பேருக்கு கடிதம் எழுதினேன். அவர் கள் உடனே பதில் எழுதி சந்திக்க அனுமதி வழங்கி யுள்ளனர்.
அவர்களிடம் தானே புயல் பாதித்த மாவட் டத்தை பேரிடர் மாவட் டமாக அறிவிக்க வலியுறுத்து வேன். அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, ஜான்சி ரானி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற் பனைச் செல் வம், அண்ணா மலைநகர் செயலாளர் ராஜா, அண்ணாமலை பல்கலைக்கழக கிளைச் செயலாளர் ராகுல் உட்பட பலர் உடனிருந் தனர்.

Leave A Reply