லண்டன், பிப்.27 –
சோமாலியாவில் ஏற்பட் டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்று களத் தில் இறங்கியுள்ள பிரிட் டனுக்கு சுயநல நோக்கம் உள்ளது என்று அந்நாட்டி லிருந்து வெளியாகும் ‘கார் டியன்’ நாளிதழ் குற்றம் சாட் டியுள்ளது.
சோமாலியாவுக்கு மனி தாபிமான மற்றும் பாது காப்பு ரீதியான உதவிகளை பிரிட்டன் செய்து தர முன் வந்திருக்கிறது. அந்நாட் டின் எரிபொருள் வளத்தில் தனக்குக் கணிசமான பங் கைப் பெற்றுக் கொள்ள லாம் என்ற எண்ணத்தில் தான் உதவிக்கரம் நீட்டி யிருக்கிறது என்கிறது கார்டி யன். சோமாலியா பற்றிய சர்வதேச மாநாடு ஒன்றிற்கு பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரத்தில் ஏற்பாடு செய்தி ருந்தார். இதில் கூடுதல் நிதி யுதவி மற்றும் பயங்கரவாதத் திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றிற்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சோமாலியா தலைநகர் மொகாடிசுவிற்கு பிரிட் டனின் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் திடீர் பயணம் மேற் கொண்டார். நாட்டை மீண் டும் கட்டமைக்க இது நல்ல வாய்ப்பு என்று அவர் அங்கு கருத்து தெரிவித்தார். எண் ணெய் இருப்பு பற்றிய ஆய்வு மற்றும் ஏற்கெனவே கண்டறியப்பட்ட வளங் கள் பற்றி இருதரப்பும் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
அடுத்த மாதத்தின் துவக் கத்திலேயே முதல் எண் ணெய்க் கிணற்றிலிருந்து பிரிட்டன் நிறுவனம் ஒன்று எண்ணெய் எடுக்கத் துவங் கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே அமெரிக்கா இதுபோன்ற வளங்களைத் தங்கள் கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மற்ற ஐரோப் பிய நாடுகள் களத்திற்குள் வருவதற்குள் முந்திக் கொள்ள வேண்டும் என் பதே பிரிட்டனின் நோக்க மாகும்.

Leave A Reply

%d bloggers like this: