சேலம், பிப். 27-
சேலம் மாவட்டம், அடிமலைப்புதூர் அருகே 2 லாரிகள் மோதிக் கொண்டதில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் கவுண்டம்பட்டி, மூக்கா
ரெட்டிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள், சேலம் வீராணம் அருகே சுக்கம்பட்டியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கூலி வேலைக்காக தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மாலையில் பஸ்ஸை தவறவிட்டதால் கோவையில் இருந்து திருவண்ணா
மலை நோக்கிச் சென்ற ஒரு லாரியில் பயணம் செய்தனர்.
மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள அடி
மலைப்புதூர் பகுதியில், வேலூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற டேங்கர் லாரியும், விவசாயத் தொழிலாளர்கள் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரியின் டிரைவர் காந்தி (45), கிளீனர் சரவணன், டேங்கர் லாரி டிரைவர் சீதாரா
மன் (45), கிளீனர் விஜயன் (35), விவசாய கூலித் தொழிலாளர்கள் தங்கராஜ் (50), இவரது மனைவி வெண்ணிலா (45), குமரன் (45) இவரது மனைவி தனபாக்கியம் (30), ரவி (45), இவரது மனைவி குப்பம்மாள் (41), சின்னையன் (45), மனைவி சென்னம்மாள் (40), ராமன் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
னர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: