இஸ்ரேலின் துறைமுகத் தொழி லாளர்கள் பெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி யுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் முக் கியமான துறைமுகங்களான ஹைஃபா, அஸ்டோட் மற்றும் எய்லாட் ஆகிய மூன் றிலும் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஊதிய உயர்வு மற்றும் தங்களுக்கான ஓய்வூதிய நிதியம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்னிறுத்தி தொழிலாளர் கள் போராடி வருகிறார்கள். பிப்ரவரி மாதத்துவக்கத்தில் ரயில்வே ஊழியர் களும் இதே கோரிக்கைகளுக்காகப் போராடினார்கள்.
* * *
புதிய அரசியலமைப்புச் சட்டம் உரு வாக்குவது பற்றிய பொது வாக்கெடுப்பு சிரியாவில் நடந்துள்ளது. நாடு முழு வதும் உள்ள 14 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் 1 கோடியே 46 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். நெருக்கடி சூழலிலிருந்து விடுபட புதிய சீர்திருத் தங்களை அரசியலமைப்புச் சட்டத் தில் கொண்டு வரத் தற்போதைய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்கு மக்கள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் உடனடியாக நடை முறைப்படுத்தப் படும் என்று அரசு கூறியுள்ளது.
* * *
யூரோ மண்டலத்திலிருந்து கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாடு வெளியேற வேண்டும் என்று ஜெர்மனியின் உள்துறை அமைச் சர் ஹான்ஸ் பீட்டர் ஃபிரெட்ரிச் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிதி யமைப்பிலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் போட்டிச்சூழல் கிரீஸ் பொரு ளாதாரத்தை முன்னேற்றச் செய்யும் என்கிறார் அவர். கிரீசின் பாதிப்பு யூரோவைத் திணறடிப்பதால் இந்த உத்தியைக் கையாள ஐரோப்பாவின் பெரிய நாடுகள் முயற்சி செய்து வரு கின்றன.

Leave A Reply

%d bloggers like this: