சென்னை, பிப் .27-
சீனாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி தயாரிப்பு நிறுவனமான ‘சீனா சனர்ஜி’ இந்தியாவில் சூரிய மின்சக்தி தயாரிப்புத் துறை யில் முதலீடு செய்யத் தயா ராக உள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்டீபன் கய் தெரிவித்தார்.
சூரிய ஒளியின் மூலம் 45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 2 ஜெனரேட்டர்களை குஜ ராத் சனர்ஜி நிறுவனத்திட மிருந்து கொள்முதல் செய் துள்ளது.
இந்திய சூரிய மின்சக்தித் துறை நடத்திய இரண்டா வது மாநாட்டில் உரையாற் றிய ஸ்டீபன் கய், 2012ம் ஆண்டில் சூரியமின்சக்தித் துறையில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும் என்று குறிப்பிட் டார்.
நிதி பெறுவதில் உள்ள தடைகளைத் தகர்க்க எங் கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ விரும்புகிறோம். இந் திய சந்தையில் சனர்ஜி நிறு வனத்திற்குப் பெரும் வாய்ப் புகள் உள்ளன. எதிர்காலத் திட்டங்களுக்கு இது மிக முக்கியமானதாகும் என்று கய் தெரிவித்தார்.
சனர்ஜி நிதியுதவி அளிக்க முன்வருவது இந்தியச் சந்தையின் போக்கையே மாற்றி விடும் என்று நிதி வல்லுநர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.
குறைந்த வட்டியில் நிதி யுதவி கிடைப்பது திட்டத் தின் வெற்றிக்கான பங்களிப் பாகும் என்று தொழிற்துறை நிபுணரும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் பத்திரிகை யான ‘பஞ்சபூதா’வின் ஆசி ரியருமான வினீத் விஜய ராகவன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.