நாமக்கல், பிப். 27-
தமிழகத்தில் ஏற்பட்
டுள்ள தொடர் மின் வெட்
டால் தொழிலாளர்கள் வேலை தேடி வெளி மாநி
லம் செல்லும் நிலை உள்
ளது.
இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று சிறு, குறுந்தொழில் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாமக்கல்லில், சிறு மற்
றும் குறுந்தொழில் சங்க கூட்டம் சங்கத் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. செயலா
ளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு:
தமிழகத்தில் நிலவி வரும் மின்பற்றாக்குறை
யால், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே, மின் பற்றாக்
குறையை அரசு போக்க வேண்டும். தொடர் மின்
வெட்டால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு காரண மாக, தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதனால் தொழிலா
ளர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அரசு முயற் சிக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு
தடையில்லாத மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்
பகிர்மானத்தில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அனைத்து சிறு தொழி ல்களுக்கும், அவர்களது தொழிலுக்கு ஏற்ப ஜென ரேட்டர் வாங்கிக் கொள்ள, வங்கிகள் தாராள கடனுதவி அளிக்க அனுமதிக்க வேண் டும்.
இலவச பொருட்கள் வழங்குவது போல், சோலார் விளக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்
ளிட்ட தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர் வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: