கோவை, பிப். 27-
தொழிலாளர் விரும்
பும் சிஐடியு சங்கத்துடன் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்
திட வேண்டும் என வலியு
றுத்தி சுமைப்பணி தொழி
லாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த
னர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்
திற்கு திங்களன்று சிஐடியு கோவை மாவட்ட துணைத்
தலைவர் பி.கே.சுகுமாரன், சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செய
லாளர் எம்.எ.பாபு தலைமை
யில் ஏராளமான சுமைப்
பணி தொழிலாளர்கள் வருகை புரிந்து ஆட்சியரி
டம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். இம்மனுவில் தெரிவித்
திருப்பதாவது:
கோவை மாநகர் மற்
றும் அதன் சுற்று வட்
டாரத்தில் உள்ள கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்டுகளில் சுமார் நானுற்றுக்கும் மேற்
பட்ட சுமைப்பணி தொழி
லாளர்கள் லாரிகளிலி
ருந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுப்
பட்டு வருகின்றனர். இத்
தொழிலாளர்களில் பலர் கோவை மாவட்ட லாரி பாரம் தூக்கும் தொழிலா
ளர்கள் சங்கத்தில் உறுப்
பினர்களாக இருந்தனர். ஆனால் இச்சங்கத்தின் தொழிலாளர் நலனுக்கெதி
ரான நடவடிக்கையின் காரணமாக பெரும்பான்
மையான தொழிலாளர்
கள் இச்சங்கத்திலிருந்து வெளியேறினர். பின்னர், இத்தொழிலாளர்கள் கடந்த 2009ம் ஆண்டு சிஐ
டியுவின் கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்
களாக இணைந்து கொண்
டனர்.
இந்நிலையில், கூலி உயர்வு ஒப்பந்தத்தின் போது சுமைப்பணி தொழிலாளர்
களை அதிகமாக கொண்
டுள்ள சிஐடியு சங்கத்தினை
புறக்கணித்து டிரான்ஸ்
போர்ட் நிர்வாக தரப்பு சங்கமான கோவை மாவட்ட கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், பாரம் தூக்கும் தொழிலாளர் சங்
கத்துடன் மூன்றாண்டு
களுக்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு செய்துகொண்
டது. இந்த ஒப்பந்தத்தை பெரும்பான்மையான சுமைப்பணி தொழிலாளர்
கள் மற்றும் சிஐடியு தொழிற்
சங்கம் ஏற்றுக்கொள்ள
வில்லை. இதனால் சிஐடியு சங்கத்துடன் நிர்வாகத் தரப்பு சங்கம் கூலி ஒப்பந்
தம் குறித்து பேச்சு
வார்த்தை நடத்தக்கோரி பலமுறை கடிதம் அளிக்
கப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்வித பதில் நடவடிக்கை
யும் எடுக்கப்படாததால் வேலை நிறுத்த நோட்
டீஸ் அனுப்பப்பட்டது. இதன்பிறகு, தொழிலாளர் அலுவலகத்தில் நடை
பெற்ற முத்தரப்பு பேச்சு
வார்த்தையில் சிஐடியு சங்கம் எழுப்பிய சில கோரிக்கைகளை அமல்
படுத்துவதாக உறுதியளிக்
கப்பட்டது.
இதனிடையே, சிஐடியு சங்கத்தினை அழைக்கா
மல் முன்னமே செய்து
கொண்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்வாகத் தரப்பிலிருந்து தொழிலாளர்களை நிர்
பந்தப்படுத்தி வருகின்றனர். மேலும். காவல்துறையி
னர் மூலம் பொய்யான புகார்களை கூறி சிஐடியு சங்கத்தில் உள்ள தொழி
லாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்
சியர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், தொழி
லாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்
தும், தொழிலாளர் நலச்
சட்டங்களை அமல்படுத்
தாமல் செயல்படும் கோவை
மாவட்ட டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் நிர்வாகத்
தினை கண்டிப்பதுடன், தொழிலாளர்கள் விரும்
பும் சிஐடியு சங்கத்துடன் கூலிஒப்பந்தப் பேச்சு
வார்த்தை நடத்த நடவ
டிக்கை எடுத்திட வேண்
டும் என மனுவில் தெரிவிக்
கப்பட்டுள்ளது.
இம்மனுவினை சிஐ
டியு சங்கத்தின் நிர்வாகி
கள் எ.சகாபுதீன், ஜம்பு, எம்.முருகன், ராதாகிருஷ்
ணன், எம்.எஸ்.பீர்முகமது மற்றும் ஏராளமான சுமைப்
பணி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: