விருதுநகர், பிப்.27-
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு வெடி விபத்து ஏற்படுவதும்,அதில் மனித உயிர்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது சல் வார்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான சக்தி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இங்கு வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை பார்த் துக் கொண்டிருந்தனர். அப் போது ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளை சில தொழி லாளர்கள் செய்து கொண்டிருந் தனர். பட்டாசு குழாய்களில் மருந்து கலவையை கெட்டியாக செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர சத் தத்துடன் அந்த அறை வெடித்து சிதறியது.
படுகாயம்
இதில் சாத்தூர் படந்தா லைச் சேர்ந்த முருகன் (35), மாரிக்கண்ணு (35), சாத்தூர் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பழனி (55) ஆகியோர் உடலில் உள்ள தோல் முழுவதும் கருகி யது. இவர்கள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். பின்பு மேல் சிகிச் சைக்காக அனைவரும் மது ரைக்கு பரிந்துரை செய்யப்பட் டனர்.
தகவலறிந்து தீ அணைப்புத் துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீ மற்ற அறைகளில் பரவாமல் தீயை அணைத்தனர். மாவட்ட வரு வாய் அலுவலர் சி.அ.ராமன், சிவகாசி கோட்டாட்சியர் ஆகி யோர் மருத்துவமனைக்கு வந் தனர்.
சிஐடியு ஆறுதல்
தகவலறிந்து பட்டாசு-தீப் பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். மகாலட்சுமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜே.லாசர், சிபிஎம் மாவட்டக் குழு உறுப் பினர் பி.பாண்டி ஆகியோர், காயமடைந்தவர்களின் குடும் பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
காரணம்
பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஒப்பந்தக் கூலி முறை தான் என சிஐடியு ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. அதா வது தொழிலாளி ஒரு பட்டாசு செய்தால் இவ்வளவு கூலி என நிர்ணயம் செய்து விடுகின்றனர். எனவே, தொழிலாளர்கள் அவ சர அவசரமாக வேலை பார்க் கின்றனர். இதனால் பெரும் உயி ரிழப்புகள் ஏற்பட்டுகின்றன.
மேலும், தொழிலாளர் ஆய் வாளர்கள் முறையாக ஆலை களை கண்காணிப்பது கிடை யாது. அதேபோல பேன்சி ரக வெடிகளுக்கு தரமற்ற ரசாயன கலவைகள் பல கம்பெனிகளில் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் சிறிய கற்கள் ரசா யான கலவைகளுக்குள் இருக் கின்றன.
அவ்வாறு இருந்தால் மருந்தை கெட்டியாக இடிக்கும் போது வெடிக்கின்றன. இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள் வதில்லை.

Leave A Reply