பொது மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களுக்கு தடையின்றி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்
– பிரதமர் மன்மோகன்சிங்.
ச.சா – அது இன்னும் கனவுதான்,,, 2004ல குடுத்த அதிக நிதி ஒதுக்கீடு உறுதிமொழிய நிறைவேத்திருந்தா செஞ்சுருக்கலாம்…
* * *
நாடாளுமன்றத்தேர்தலில் 40 இடங்களில் வெல்லப்போவதாக ஜெ.சொல்கிறார். சொல்பவர்களைவிட சொல்லாதவர்கள்தான் வெற்றி பெறுவர் – திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.
ச.சா – சட்டமன்றத் தேர்தல்ல கிடைச்ச பாடமோ…??
* * *
எதிர்காலத்தில் மின்பற்றாக்குறை வராமல் இருக்க முதல் வரின் நேரடி மேற்பார்வையில் பணிகள் தீவிரமான நடை பெறுகின்றன. – தமிழக அமைச்சர் விஸ்வநாதன்.
ச.சா – அப்படின்னா இந்த மின்வெட்டும் அவரோட நேரடி மேற்பார்வைலதான் நடக்குதா….??
* * *
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாதான் காரணம் – அமெரிக்கா கருத்து.
ச.சா – ஈரான நீங்க மிரட்டுனதுனாலதான் அதிகமாகு துன்னு செய்தி வருதே…??

Leave A Reply

%d bloggers like this: