சென்னை, பிப். 27-
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக் கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விலக்கிக்கொண்டது.
காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய் யப்பட்டது தொடர்பான வழக்கு, புதுச்சேரி சிறப்பு கோர் ட்டில் நடந்து வரு கிறது. இந்த வழக்கில் முக் கிய குற்றவாளியான ஜெயேந் திரர், சிறப்பு கோர்ட் நீதிபதி ராமசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஆடியோ டேப் வெளியா னது. இதனால் புதுச்சேரி யில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வக்கீல் சுந் தரராஜன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை உயர்நீதி மன்ற நீதிபதி சுகுணா விசா ரித்து சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
தடையை நீக்கக் கோரி காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சுந்தரேச அய்யர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுகுணா விசா ரித்து, டிவிஷன் பெஞ்ச் விசா ரணைக்கு அனுப்பி வைத் தார். இதைத் தொடர்ந்து மனுவை நீதிபதிகள் கே.என். பாட்ஷா, பால்வசந்தகுமார் விசாரித்தனர். மனுதாரர் சுந்தரேச அய்யர் சார்பாக வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்த ரேசன், உயர்நீதிமன்ற பதி வாளர் ஜெனரல் சார்பாக வழக்கறிஞர்கள் முத்துக் குமாரசாமி, சுரேஷ்குமார் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் புதனன்று (பிப். 26)தீப்பு அளிக்கப்பட் டது. தீர்ப்பு விவரம்:
ஜெயேந்திரர் டேப் விவ காரம் தொடர்பாக உயர்நீதி மன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இருந்தா லும் இந்த விவகாரத்தில் சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் உதவி கமி ஷனர் சுதாகர் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதுவை நீதிபதி ராமசாமி, வேறு கோர்ட்டுக்கு மாற்றப் பட்டிருப்பதால் புதுச்சேரி யில் நடந்து வரும் சங்கர ராமன் கொலை வழக்கு விசா ரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: