கோவை,பிப். 27-
கோடையில் விலங்கு
களின் தாகத்தை தீர்க்க, கோவை வனப்பகுதியில் 13 நீர்த்தொட்டிகள் அமைக்
கப்பட உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி தெரிவிக்கை
யில்;
கோவை மாவட்டத்
தில் வனப்பகுதி 694 கிலோ
மீட்டர் பரப்பளவில், 6 பகுதியாக பிரிக்கப்பட்டுள்
ளது. இந்த வனப்பகுதியில் யானை உள்பட பலவகை மிருகங்கள் உள்ளன.
கோடை காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அலை
யும், அப்போது காட்டை ஒட்டியுள்ள கிராமப் பகுதி
களுக்கு வன விலங்குகள் புகுந்துவிடும். இதனால் மக்களுக்கும், விவசாயிகளுக்
கும் பாதிப்பு ஏற்படுகிறது, இதை தடுக்க வனப்பகுதிக
ளில் 13 இடங்களில் 4.35 கோடி செலவில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்
பட உள்ளது. எட்டிமடை,
தடாகம், விலுவமரத்துக்
குட்டை ஆகிய இடங்கள்
அருகே உள்ள காட்டுப்
பகுதியில் இந்த குடிநீர் தொட்டிகள் அமைக்கப்ப
டும். இன்னும் 15 முதல் 30 நாட்களுக்குள் தண்ணீர் தொட்டிகள் கட்டி முடிக்
கப்பட்டு தண்ணீர் நிரப்
பப்படும். இதற்காக ஆழ்
துளை கிணறு அமைக்கப்
பட்டு குழாய் மூலம் தண்
ணீர் கொண்டு வரப்பட உள்ளது எனவும் வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.