கோவை, பிப். 27-
கோவை, பஞ்சு குடோ
னில் ஏற்பட்ட தீ விபத்
தால் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாச
மாகின. மேலும் வனப்
பகுதியில் இருந்த மரங்கள் சேதமாகியுள்ளன.
கோவை தண்ணீர்
பந்தல் காவேரி நகரில் ரயில்வே கேட் அருகே பஞ்சு குடோன் உள்ளது. இந்த குடோன் அருகே குப்பைகள் அதிகமாக இருந்ததால். இதில் திடீ
ரென தீபிடித்தது. அதிக அளவில் தீ பரவியதால் அருகே உள்ள பஞ்சு
குடோனில் தீ பிடித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று அதிகமாக வீசியதால் பஞ்சு குடோன் முற்றிலும் எரிந்தது. பின்
னர் இது குறித்து தீய
ணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்
டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீய
ணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்
தால் அப்பகுதி வழியாக செல்ல போக்குவரத்து
தடை செய்யப்பட்டன.
தண்டவாளம் அருகே உள்ளதால் ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் இதுதொடர்பாக பீள
மேடு போலீசார் விசா
ரணை மேற்கொண்டனர். அதில் அருகே இருந்த குப்பையில் இருந்தது தீ பரவியது தெரியவந்தது. இந்த தீ விபத்தால் பல லட்
சம் மதிப்புள்ள பொருட்
கள் சேதமாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: