கோவை, பிப். 27-
கோவை மாநகராட்சியின் துணைமேயராக லீலாவதி உண்ணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடை
பெற்ற மாநகராட்சிக்கான உள்ளாட்சி மன்ற தேர்
தலில் அதிமுகவின் சார்
பில் போட்டியிட்ட செ.ம.வேலுச்சாமியும், துணை மேயராக சின்
னத்துரை தேர்வு செய்
யப்பட்டனர். இந்நிலை
யில் சில மாதங்களுக்கு முன்பு சசிகலா உள்ளிட்
டோர் அதிமுகவிலி
ருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் துணை மேயர் சின்னத்துரை குடும்பப்பணியின் காரண
மாக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்
தார். இந்நிலையில் புதியதாக துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்களன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை பிரதான எதிர் கட்சியான திமுக
வின் கவுன்சிலர்கள் புறக்கணித்து துணை மேயர் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் துணை மேயர் பதவிக்கு 63வது வார்டு மன்ற உறுப்பினர் பால்ராஜ் பெயரை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இவர் மாநகராட்சியின் ஆடு அறுமனை கூடம் குத்தகைக்கு எடுப்பதற்காக விண்ணப்
பித்திருந்தது தெரியவந்தது. இதனால் துணை மேயராக தேர்வு செய்வது குறித்து அதிமுக கவுன்
சிலர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இப்பர
பரப்பின் காரணமாக மாநகராட்சி ஆணையாளர் பொன்னுசாமி கூட்டத்திலிருந்து வெளியேறி, மேயர் செ.ம.வேலுசாமி அறைக்கு சென்று அவரு
டன் விவாதித்தார். இதன்பின் மன்ற கூட்டத்திற்கு திரும்பிய ஆணையாளர் துணை மேயருக்கான தேர்தலுக்கான வேட்புமனு துவங்குகிறது. இதில் ஒருவருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தால் வாக்கு பெட்டி வைத்து வாக்குப்பதிவு நடைபெ
றும் என அறிவித்து, அதற்காக ஒரு மணிநேரம் அவகாசம் வழங்கினார். இதில் 73வது வார்டு கவுன்
சிலர் லீலாவதி உண்ணி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அவர் மாநகராட்
சியின் முதல் பெண் துணை மேயராக போட்டி
யின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.