கூடங்குளத்தில்
15 நாட்களில் மின் உற்பத்தி: அமைச்சர் நாராயணசாமி
காரைக்கால், பிப். 27-
கூடங்குளத்தில் இன் னும் 15 நாட்களில் மின் உற் பத்தி தொடரும் என மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதை தெரி வித்தார். மேலும் அவர் கூறிய தாவது:
கூடங்குளத்தில் மின் உற் பத்திக்கான பல்வேறு ஆய்வு கள் நடத்தப்பட்டு விட்டன. முன்னாள் ஜனாதிபதி அப் துல் கலாம் கூட கூடங்குளம் அணு உலை 7 அடுக்கு பாது காப்பு அம்சம் உள்ளது என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உதவியுடன் இன் னும் 15 நாட்களில் மின் உற் பத்தி தொடரும் எனவும், பல் வேறு அரசியல் கட்சிகள் கூடங்குளம் போராட்டத் திற்கு ஆதரவு அளிப்பது ஜன நாயகத்தில் கட்சிகளுக் குள்ள உரிமை , எனவும் தெரிவித்துள்ளார்.
//அடுத்த செய்தி//
பேருந்தில் சிக்கி இறந்த பெண் குடும்பத்துக்கு
ரூ.1 லட்சம் நிதி
சென்னை, பிப். 27-
பேருந்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் கிராமம், கூட்டு ரோட்டில் 24.2.2012 அன்று அப்துல்லாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந் தின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், பேருந் தில் ஏறிக்கொண்டிருந்த திரு வண்ணாமலை மாவட்டம், அழகு சேனை கிராமத்தைச் சேர்ந்த பிரேமா என்பவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இவ்விபத்தில் அகால மரணமடைந்த பிரேமா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள் கிறேன். இத்துயரச் சம்பவத் தில் காலமான பிரேமாவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு முதலமைச் சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து ஒரு லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

Leave A Reply

%d bloggers like this: