கொல்கத்தா காவல்துறையிடம் ஒரு பெண், தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாக் கப்பட்ட புகார் அளித்த போது அவரது புகாரை உதாசீனப்படுத்தி புறந்தள்ளிய கொடுஞ்செயலை காவல்துறை அதிகாரி கள் செய்தனர். அதே சமயம், தவறான தகவலின் அடிப்படையிலோ அல்லது தன்னுடைய எடுத்தெறிந்து பேசும் ஆண வத்தாலோ முதலமைச்சர் மம்தா பானர்ஜி அந்தப் பெண்ணின் புகாரை தன்னுடைய அரசிற்கு களங்கம் கற்பிக்க புனையப் பட்ட கற்பனை என்று நிராகரித்த செயல், காவல்துறையின் செயல்பாட்டைவிட மிகவும் கேவலமானதாகும். இவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மாநிலத் தின் போக்குவரத்துதுறை அமைச்சர், பாதிக்கப்பட்டவர் அந்த அகால இரவு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரிவித்ததோடு நிற்காமல், மேலும் ஒரு படி அதிகமாகப் போய், அந்தப் பெண்ணின் திருமண நிலை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள் ளார். மாநில அரசின் மற்றொரு பிரதிநிதி அந்தப் பெண்ணின் நடத்தை குறித்து பகிரங்கமாக கேள்விகள் எழுப்பியுள்ளார். இத்தகைய குரூரமான கருத்துக்கள் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் விளை வாக எழுந்தது என்றாலும், அவை இந் திய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பார்க்கும் விதத்தில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லை என் பதையே காட்டுகிறது. ஏராளமான திடுக் கிடும் திருப்பங்களுக்கும், சுழற்சிகளுக் கும் பிறகு காவல்துறை கடைசியாக இந்த குற்றத்தை சரியாக துப்பறிந்து, மூன்று பேர்களை கைது செய்துவிட்டதாக அறி வித்தது. ஆனால், அவர்கள் மூன்று பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதும் அவர்கள் ஆள்மாறாட்டம் செய் துள்ளார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது – இப்பொழுது தெளிவாகாத ஒரே விஷயம் யாருடைய முகத்தில் அதிகமான கரி அப்பப்பட்டுள்ளது என்பதுதான். காவல்துறை முகத்தின் மீதா அல்லது மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் மற்றும் மாநில காவல்துறை அமைச்சரு மான மம்தாவின் முகத்திலா என்ப தாகும். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் மற்றும் டெக்னிக்கலாக உள்ள குறைபாடுகள் என்ற சில விஷ யங்களை அடிப்படையாகக் கொண்டே காவல்துறை முதலில் புகாரை மறுத்துக் கொண்டிருந்தது. அவைகள் அனைத்தும் தற்போது சரிபார்க்கப்பட்டு அந்தத் தக வல்கள் உண்மை என கண்டறியப்பட் டுள்ளது. அந்த சூழலில் எந்த ஒரு பெண் ணும் பொய்யாக தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் தருவாள் என்பது சிறிதும் கற்பனை செய்ய முடி யாத விஷயம். மேலும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு தலின்படி, ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் ரீதியாக குற்றம் இழைக்கப் பட்டுள்ளதை விசாரிக்கும் போது(காவல் துறை) அந்தப் பெண்ணின் கடந்த கால வாழ்க்கை குறித்தோ அல்லது அவளது நடத்தை குறித்தோ எந்த கேள்வியையும் எழுப்பக் கூடாது என்று தெள்ளத்தெளி வாக குறிப்பிட்டுள்ளது.
இறுதியில், இந்த பிரச்சனையி லிருந்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை மாநில அரசு எந்தளவுக்கு தனது ஆளு மைக்குள் வைத்துள்ளது என்பதே மேலெழும்பி வந்துள்ளது. இந்த குற்றச்செயல், மாநிலத்தின் தலை நகரில் மிகவும் பரபரப்பான பார்க் தெருவில் நடை பெற்றுள்ளது என்றால், மாநிலத்தின் இதர பகுதிகளில் நிலைமை இதைவிட மேலும் மோசமாகவே உள்ளது. இதற்கான சாட்சியாக பிப்ரவரி 22ஆம் தேதி பர்த் வான் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் தா மற்றும் கமல் கயேம் ஆகியோர் ஊர்வலத்தில் செல்லும் போது கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள் ளது. உண்மையில் கடந்த ஆண்டு தேர் தல் முடிந்ததிலிருந்து இதுவரை மார்க் சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 58 பேர் கொல் லப்பட்டனர் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. வன்புணர்ச்சி வழக் கைப் போலவே, முதலமைச்சரின் உட னடி எதிர்வினை பாதிக்கப்பட்டவர் களையே குறைகூறுவதாக அமைந்துள் ளது. அதற்கு ஆதாரமாக கொலை செய் யப்பட்டவரின் மீது 7 வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். குமாரி (மம்தா) பானர்ஜி மற்றும் அவரது சகாக்களும் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து விதமான குற்றச் செயல்களையும் வலி மையாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு திறமையும், நோக்கமும் உள்ளதா என்பதை நேர்மை யாக சுயபரிசோதனை செய்ய வேண்டும். முதலமைச்சர், எந்த குற்றச்செயல் நடை பெற்றாலும் அதற்கு முந்தைய அரசே பொறுப்பு என்று குறைகூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால் நிச்சயமாக அவர் களையெடுப்பு நடவடிக்கைகள் எடுக்க நினைத்திருந்தால் அதற்கு போதுமான கால அவகாசம் ஏற்கனவே அளிக்கப்பட் டிருக்கிறது. இந்தக் காலத்தில் அவர் நம்பிக்கைக்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க முடியும்.
-“தி `ஹிந்து” 27 பிப். 2012 அன்று வெளியான தலையங்கத்தின் தமிழாக்கம் தூத்துக்குடி க.ஆனந்தன்.

Leave a Reply

You must be logged in to post a comment.