திருவள்ளூர், பிப். 27-
கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் பேட்டை அமைவதற்கு காரணமாக இருந்தவர் தோழர் அய்யலு தான் என்று அதிமுக முன் னாள் சட்டமன்ற உறுப்பி னரும் ஆர்.எம்.கே பொறி யியல் கல்லூரியின் நிறுவன ருமான ஆர். எஸ். முனிரத் தினம் தெரிவித்தார்.
தட்சின ரயில்வே எம்ப் ளாயீஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலாளரும் ரயி ல்வே தொழிற்சங்கத் தலை வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள் ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி. துளசி நாராயணன் தந்தை பி. அய் யலு பிப்ரவரி 13 அன்று கால மானார். அன்றே அவரது கண், உடல் தானமும் செய் யப்பட்டது.
மறைந்த தோழர் அய் யலுவின் படத்திறப்பு நிக ழ்ச்சி ஞாயிறன்று (பிப்.26) கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பாப்பன் குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. துளசிநாராயணன் தலை மை தாங்கினார். மறைந்த தோழர் அய்யலுவின் திரு வுருவப் படத்தை அவரின் நெருங்கிய குடும்ப நண்பர் என். சுப்பிரமணியம் திறந்து வைத்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம், பேராசிரியர் விஜயரங்கன், சதன் ரயில்வே வெல்பர் சென்டரின் தலைவர் வெங்கட் சாமி, சாட்சி பத்திரிகையின் ஆசிரியர் சுதாகர், மஸ்தூர் யூனியன் நிர்வாகி மெகட், தொழிற் சங்கத் தலைவர் ஜே. கே. புதியவன், ரயில் வேயில் ஓய்வு பெற்ற அதி காரி கே. எஸ். ராஜீ, டி.ஜே. எஸ். பொறியியல் கல்லூரி தலைவர் டி. ஜே. கோவிந்த ராஜன், தினபூமி இணை ஆசிரியர் புருஷோத்தமன் ஆகியோர் பேசினர்.
ஆர். எம். கே. பொறியியல் கல்லூரி நிறுவனரும் முன் னாள் சட்டமன்ற உறுப்பி னருமான ஆர்.எஸ். முனிரத் தினம்பேசும் போது, மறைந்த பெரியவர் அய்யலு அவர்களை அடிக்கடி சந் திப்பேன். அப்படி நான் ஒரு முறை அவருடைய வீட் டில் சென்று பேசும் போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரு கிறீர்கள், இந்த சமயத்தில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பணி யாற்ற வேண் டும் என அறிவுரை கூறிய தோடு, பின்தங்கிய பகுதி யான கும்மிடிப் பூண்டிக்கு சிப்காட் தொழில் பேட் டையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன் பிறகு தான் முன்னாள் முதல்வர் எம்ஜி ஆர்யிடம் பல முறை பேசி திருபெரும்பத்தூருக்கு சென் றதை மாற்றி சிப்காட்டை கும்மிடிப் பூண்டிக்கு கொண்டு வந்தோம் என்றார்.இதற்கு அய்யலுவின் முயற்சி தான் காரணம்.
விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் பெ. சண்முகம் பேசுகை யில், மறைந்த தோழர் அய் யலு மிகச் சிறந்த தொழிற் சங்க தலைவர், நேர்மையா கவும் அடிதட்டில் உள்ள தொழிலாளிகளுக்காகவும் உழைத்தவர். பணி ஓய்வு பெற்ற பிறகும் இரவு பகல் என மரணத்தின் இறுதி வரையிலும் தொழிலாளர் களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.எம். அனீப், ஜி.சம்பத் மாவட்டக் குழு உறுப்பினர் இ. ராஜேந் திரன், வட்டச்செயலாளர் ஜி. சூரியபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.