தூத்துக்குடி, பிப்.27-
புளியம்பட்டி அருகே குட்டையில் மூழ்கி 3 சிறு வர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள நாரைக்கிணறு போ லீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டை கிராமத்தில் வசிப்பவர்கள் -சேகர் மகன் பாஸ்கர் (8),கனகராஜ் மகன் தீபக்(4),முத்துமோகன் மகன் கணேசன் (8). இந்த மூன்று சிறுவர்களும் கீழக் கோட்டை கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் திங்களன்று மாலை 3மணி யளவில் குளிக்கச் சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு 3 சிறுவர்களும் சென்றதால் சகதிக்குள் அவர்கள் கால்கள் சிக்கிக் கொண்டன. இதில் சிறு வர்கள் 3பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கீழக் கோட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 3சிறுவர்களின் உடல்களை பெற்றோர்கள் அவரவர் வீடுகளுக்கு கொ ண்டு சென்றனர். இச்சம்ப வம் குறித்து தகவலறிந்த நாரைக்கிணறு போலீசார் கீழக்கோட்டை கிராமத் திற்கு சென்று சிறுவர்களின் உடலை பிரேதப் பரிசோ தனைக்கு ஒப்படைக் குமாறு கோரினர்.
அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.இறுதியில் போலீசார் சமரசம் செய்து அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: