வேலூர், பிப். 27-
காட்பாடி அருகே மோட் டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.
வேலூர் விருதம்பட்டு பதியைச் சேர்ந்தவர் ஸ்டா லின் (38). இவர் சித்தூர் எச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிர்மலா (34). இவர் சிஎம்சி மருத்துவ மனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் லெனி (7), ஏஞ்சலின் (5) ஆகியோ ருடன் ஸ்டாலின் சித்தூ ருக்கு பைக் சென்றார். இர வில் வேலூர் திரும்பினார்.
பள்ளூர் அருகே பைக் வந்தபோது எதிரே வந்த வேன் பயங்கரமாக மோதி யது. இதில் ஸ்டாலின், நிர் மலா மற்றும் இரு குழந்தை கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சித்தூர் – வேலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Leave A Reply

%d bloggers like this: