சென்னை, பிப். 27-
அண்ணா பல்கலைக்கழ கத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாததால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டது என துணை வேந் தர் மன்னர் ஜவஹர் கூறி னார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்பிஏ. படிப்புகளுக்கான முதலாம் ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதி னர். இதற்கான தேர்வு முடி கள் கடந்த 24ம் தேதி அறி விக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் திருந்தது.
இதைத் தொடர்ந்து ஏராளமான மாணவ, மாண வியர் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் இணைய தளங்களில் தங்களின் தேர்வு முடிகளை தேடினர். ஆனால் இணையதளத்தில், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக தெரிவிக் கப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் நிறுத்தப் பட்டதால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அண்ணா பல்கலைகழக பேராசியர்களை பெற்றோர் கள் பலர் தொடர்பு கொண்ட போது, பல கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த பி.இ. பி.டெக்., முதல் செமஸ்டர் தேர்வை ஒரு லட்சத்து 28ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதினர். இவர்கள் தேர்வு முடிவு கடந்த 24ம்தேதி இரவு வெளியிடப்பட்டது. ஏராள மான பொறியியல் கல்லூரி கள், தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத் துக்கு செலுத்தவில்லை. இதனால் அந்த கல்லூரிக ளில் படிக்கும் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவு கள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழ கத்தின் இந்த நடவடிக் கையை தொடர்ந்து, கடந்த 25ம்தேதி ஏராளமான கல் லூரிகள் அந்த கட்டணத்தை செலுத்தினர். இதையடுத்து, அந்த கல்லூரிகளுக்கான மாணவர்களின் தேர்வு முடிவு கள வெளியிடப்பட்டது. கட்டணம் செலுத்தியவு டன் முடிவுகள் வெளியிடப் படும்.
இவ்வாறு மன்னர் ஜவ ஹர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.