கொல்லம், பிப். 27 –
இந்திய நீர் எல்லைப்பகுதியின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். அப்போதுதான் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் பாது காப்பை உணர்வார்கள் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கொல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இத்தாலி எண்ணெய் கப்பல் என்ரிகா லெக் சியின் பாதுகாப்பு வீரர்கள் சுட்டதில் மரணம் அடைந்த வாலன்டைன் ஜெலஸ்டின் குடும் பத்தினருக்கு தனது இரங்கலையும் அவர் தெரி வித்தார்.
அந்தக்குடும்ப உறுப்பினர்களை அழைத்து 15 நிமிடம் பேசினார். சர்வதேச காட்சி மாறும் நிலையில், கடலோரப் பகுதியில் கூடுதல் கண் காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. பெரும் சவால்களை எதிர் கொள்ளும் வகை யில் கடற்படை மற்றும் கட லோரக் காவல் படை நவீனப்படுத்தப்படும். இந் தியா உள்பட, 18 நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மேற்கொண்டபோதும், சோமாலியா கடற் கொள்ளையர்கள் அதிகரிப்பதைப் போலவே உள்ளது. ஏடன் வளைகுடாப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொண்டுள்ள நிலையில், தொலைதூர நீர் எல்லையில் கடற்கொள்ளை யர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொள் கிறார்கள். சில காலத்திற்கு முன்னர் லட்சத் தீவுப் பகுதியிலும் அவர்கள் ஊடுருவி னர் என அமைச்சர் தெரிவித்தார். கடலோரப் பகுதி களின் பாதுகாப்புக்கு மீனவர்கள் பெரும்பங்கு உதவுகின்றனர். இந்திய மீனவர்களை, இத் தாலி வீரர்கள் கொன்றது தொடர்பான விசார ணை சரியான பாதையில் செல்கிறது. இந்த வழக்கின் முடிவை இந்திய நீதிமன்றங்கள் தீர் மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply