நாடு சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நாட்டு விவசாயிகளுக்கும், தொழி லாளர்களுக்கும் ஏராளமான கனவுகள் இருந்தன. சோசலிசம் பேசி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி நமது நாட்டின் ஜன நாயகத்தை ஆல் போல் தழைக்கச் செய் யும்; இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய ஆயிரமாயிரம் விவ சாயிகளின், தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரம் உயர ஆவன செய்யும்; இனி மேல் இந்த நாட்டில் மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன. இந்த கனவுகள் எல்லாம் நன வாகிவிட்டனவா என்பது நம் முன்னே மிகப் பெரிய கேள்விகளாக இருக்கின்றன. அதில் ஒரு நீண்ட கனவு, குறைந்தபட்சக் கூலி!
இந்தியாவைப் பொறுத்தவரையில் 2007ம் ஆண்டு வரை மத்தியில் மற்றும் மாநிலங்களில் அட்டவணைப்படுத்தப் பட்ட வேலைகளுக்கு தேசிய அளவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.80 ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2009-ல் இது ரூ.100-ஆக இருந்தது. தற்போது 2011-ல் இது ரூ.115ஆக உயர்த் தப்பட்டுள்ளது. ஆனால், இது முறையாக எல்லா இடங்களிலும் இந்த வேலை களுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என் றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
குறைந்தபட்ச ஊதியம் என்றால் என்ன? அதற்கான பொருளாதார பின் னணி என்ன? இன்று வரை அது வழங் கப்பட்டுள்ளதா? அதற்காக நாம் போராட வேண்டிய அவசியம் என்ன?
இன்றைக்கு நமது நாட்டின் தொழி லாளி வர்க்கத்தில் 96 சதமானம் பேர் முறைசாராத் தொழிலைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கவுரவமான குறைந்தபட் சக் கூலி என்பது ஒரு பெருங்கனவு. மீத முள்ள முறை சார்ந்த அரங்கங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஊதி யமும் அரசு உத்தரவாதம் அளித்த குறைந்தபட்ச ஊதியத்தினை ஈடு செய் வதாக இல்லை என்பது தான் உண்மை.
கண்ணியமான வேலை
குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு தொழிலாளி மற்றும் அவரது குடும்பம் வாழ்வதற்கான செலவினங்களை ஈடு செய்வதாக இருக்க வேண்டும். மேலும் அது பொதுவாக அந்தத் தொழிலாளி வாழக்கூடிய சமுதாயத்தில் உள்ள பிற தொழிலாளர்கள் வாங்கக்கூடிய ஊதியத் திற்குக் குறைவில்லாததாகவும், பிற தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரத் திற்குக் குறைவில்லாத நிலையை உத்தர வாதப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படி குறைந்தபட்ச ஊதி யம் நிர்ணயிக்கப்படுவதே கூட தொழி லாளர்களை குறைந்த கூலியில் கடின உழைப்பிற்கு ஆட்படுத்துவதை தடுப் பதற்கு உதவும். உழைப்புச் சுரண்டலை குறைப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமையும்.
தொழிலாளர்களின் தகுதிக்கேற்ற கண்ணியமான வேலை என்பதை நாம் என்னவாக புரிந்து கொண்டுள்ளோம்? நல்ல சம்பளம், பாதுகாக்கப்பட்ட பணிச் சூழல், குடும்பத்திற்கான பாதுகாப்பு, சுய முன்னேற்றம், பேச்சு சுதந்திரம், அணி திரளும் உரிமை, வாழ்வாதார முடிவுகளில் தலையிடும் வாயப்பு, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படுதல் என்று பலவும் உத்தரவாதப்படுத்தப்படுவதுதான் கண்ணியமான வேலை என்பதற்கான இலக்கணம்.
பொருளாதாரச் சக்கரம் சுழல…
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது எப்போது சாத்தியப்படுமென் றால், மக்களின் வாங்கும் சக்தி அதி கரிக்கும் போது தான் பொருளாதார சுழற் சிக்கான வாய்ப்பு ஏற்படும். வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் தொழிலாளர் சந்தையில் தனது உழைப் புச் சக்தியை விற்கும் தொழிலாளிக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். அந்த கூலி அவனை(ளை) அவன(ள)து குடும்பத்தை பாதுகாப் பதற்கு, பராமரிப் பதற்கு போதுமானதாக இருக்க வேண் டும். அப்போதுதான் வாங் கும் சக்தி என் பது உருவாகவோ அல்லது ஒரு வேளை பிற புறச்சூழ்நிலைகள் எல்லாம் சாதக மாக இருந்தால் அதிகரிப் பதற்கோ வாய்ப்பு ஏற்படும். அதனால் ஏற் படும் பொருளாதார சுழற்சி நாட்டின் முன் னேற்றத்திற்கான வாய்ப்பினை ஏற்படுத் திக் கொடுக்கும். எனவே, குறைந்தபட்ச ஊதியம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமான மனித வள மேம்பாட்டை உத்தரவாதப்படுத்த அவ சியமாகிறது.
அரசியலமைப்புச் சட்டம்
என்ன சொல்கிறது?
இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, இந்திய நாட்டின் பிரஜை கண்ணியமாய் வாழ்வ தற்கான உரிமையை அங்கீகரிக்கிறது. கண்ணிய மாய் வாழ்வதற்கு கண்ணியமான வேலை வேண்டும். அதற்கு அடிப்படை ஆதாரமான குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.
அதே போல அரசியலமைப்புச் சட் டப் பிரிவு 42, அரசு நியாயமான, மனிதத் தன்மையுடனான பணி நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய அர சாங்கத்தின் கடமை குறித்து பேசுகிறது. நியாயமான, மனிதத் தன்மையுடனான என்பதிலேயே குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயம், தர்மம், நீதி என அனைத்தும் அடங்கி விடுகிறது.
நாம் ஏன் போராட வேண்டும்?
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக் கப்பட வேண்டும் என்பது இன்றைய உலகமய, தாராளமய, தனியார்மய இந்தி யாவில் ஏன் என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட் ரோல்- டீசல் விலை உயர்வு ஆகியவை தனி நபர் நுகர்வினை குறைத்து, இன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும், எடை இழப்பிற்கும், பல்வேறு புதிய புதிய நோய்களுக்கும் மக்களை ஆளாக்கி யுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் உணவுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கிவிட்டது. குறைந்த பட்ச சமூகப் பாதுகாப்புகள் கூட இந்த அர சாங்கத்தால் இந்த நாட்டு பிரஜை களுக்கு அமல்படுத்தப்படுவதில்லை. கல்வி, மருத்துவம், விவசாயம், சுகாதாரம் என அனைத்திலும் பொது முதலீடு குறைக்கப்பட்டுவிட்டது. இருக்கிற ஒரே பாதுகாப்பான பென்சன் திட்டத்திற்குக் கூட புதிய பென்சன் என்ற பெயரில் உலைவைத்து விட்டார்கள். நாட்டில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கு மான இடைவெளி விண்ணுக்கும் மண் ணுக்குமான இடைவெளியாக அதி கரித்து வருகிறது.
இந்த சூழலில் குறைந்த பட்சம் மாதம் ரூ.10,000 என்பது எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை கண்ணியமாய் நடத்து வதற்குப் போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி கூட நம்மில் பலருக்கு எழுகிறது. ஆனால், பல இடங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948-ஐ கூட முறையாக அமல்படுத்துவதில்லை என்பதை அர சாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கிறது என்பது தான் வேதனை.
தொழிலாளர் நலச் சட்டங்களை குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும் என்பது ஒரு புறம். போராடிப் பெற்ற பயன்களை பாதுகாக்க வேண்டு மானால், ஏற்கனவே உள்ள உரிமைக் கான போராட்டத்தையும் தொடர வேண் டும். அதே நேரத்தில் புதிய ஒன்றை பெறு வதற்கான போராட்டத்தையும் நடத்த வேண்டும். நாம் இப்போது கேட்பது புதிய ஒன்றல்ல, ஏற்கனவே போராடிப் பெற்ற குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி.
குறைந்தபட்சக் கூலி ரூ.10,000 வேண்டும் என்பது உள்பட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 28 வேலைநிறுத்தத்தில் அணிதிரள்வோம்!
M®.v°. br©gf«

Leave a Reply

You must be logged in to post a comment.