சென்னை, பிப். 27-
ஒட்டுமொத்த நிர்வா கத்தை மேற்பார்வையிடும் அமைப்பு தேவை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் கூறினார்.
லோக்பால் அவசியமா? அல்லது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் ஊழ லுக்கு எதிரான பொறுப்பு டமை தன்மை மற்றும் குறை தீர்ப்புக்கான செயல் திட்டங்களை வலுப்படுத்து வது போதுமானதா என்பது குறித்த கலந்துரையாடலில் பேசிய அவர், தினந்தோறும் மனித உரிமைகள் மீறப் படும் பெரும்பான்மையான மக்களின் பிரச்சனைகளை குறைகளை தீர்க்கமுயலும் ஒரு நிறுவனத்தை நாம் உரு வாக்கவேணடும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 77 விழுக்காடு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கமுயலும் ஒரு நிறுவ னத்தை உருவாக்க வேண் டும் என்றும் குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய உரி மைகளை கிடைக்கச் செய் யும் சமூகம் பற்றி மத்திய அர சின் லோக்பால் மசோதாவும் ஹசாரே குழுவின் ஜன்லோக் பாலும் ஏதும் பேச வில்லை என்றும் அவர் கூறினார்.
ஊழல்களை தடுக்க நம் மிடம் போதுமான சட்டங் கள் உள்ளன என்று கூறிய நீதிபதி சுரேஷ், ஊழல் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய சிபிஐ உருவாக் கப்பட்டது. பல சட்டங்க ளும் உருவாக்கப்பட்டன. ஆனாலும் 2ஜி அலைக் கற்றை ஊழல் போன்ற மிகப்பெரிய முறைகேடுகள் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நமக்குதேவை புதிய லோக்பால் அல்ல.ஏற்க னவே நடைமுறையில் இருக் கும் அமைப்புகளை பலப் படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கல்வியாளர் எஸ்.எஸ். இராஜ கோபாலன் பேசுகை யில், ஊழலுக்கான அனைத்து காரணங்களையும் ஒழிப் பது சாத்தியமில்லை. பல் வேறு செயல்முறைகளின் மூலம் அவற்றை குறைக்க மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு வார்டுகளிலும் பொறியா ளர்கள், மருத்துவர்கள், ஆசி ரியர்கள், வழக்கறிஞர்கள், ஒப்பந்தகாரர்கள், போன்ற வல்லுநர்கள் இருக்கும் போது வார்டுகளுக்கான நிதியை மாநகராட்சி ஒதுக் கும் போது, அந்தந்த வார்டு களின் குடிமக்களை கொண்ட ஒரு குழு திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மக்கள் தகவல் உரிமைச் சட்டத்திற்கான நிறுவன உறுப்பினர் நிகில் தே பேசு கையில், மக்கள் உரிமை களை மறுக்கும் தன்மை யோடு இருக்கும் அரசு பரவ லான சமூக மற்றும் அரசி யல் இயக்கங்களின் மக்கள் கூட்டணியால் மாற்றப்பட வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் ஓ.பெர் ணான் டஸ் (எச்ஆர்எஃப்), ஹன்றி திபேன் (பிப்பீள்ஸ் வாட்ச்) ஜேசு ரத்தினம் (ஸ்னேகா) உள்பட
பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.