சென்னை, பிப். 27-
என்கவுன்டர் நடந்த வீட்டை ஆய்வு செய்ய வந்த மனித உரிமை கழகத்தினருடன் பொதுமக்
கள் என்ற போர்வையில் அதிமுகவினர் வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் சேர்ந்து அக்குழுவினரை ஆய்வு செய்ய விடாமல் துரத்தினர். இதுபற்றிய விவரம் வருமாறு:
வங்கி கொள்ளையர்கள் என்று கூறி கடந்த 23ம் தேதி வேளச்சேரியில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன் றனர். என்கவுன்டர் நடந்த வீடு மற்றும் சம்
பவ இடத்தை பார்வையிட ஞாயிறன்று (பிப்.26)
காலை மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மார்க்ஸ், கல்யாணி, சுகு
மாறன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சென் றனர். என்கவுன்டர் நடை பெற்ற ஏ.எல். முதலி தெரு விற்குள் மனித உரிமைக்குழுவினர் நுழைந்தவுடன், அவர்களை காவல்துறை ஆய்வாளர் ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் தடுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும், அக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு மக்கள் குழுமினர். அங்கி ருந்த அதிமுக-வினரும் காவல் துறையினருடன் இணைந்து மனித உரிமைக் குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தெருவுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனையடுத்து மனித உரி மைக் குழுவினர் திரும்பிச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: