புதுச்சேரி, பிப். 27-
உயர்த்திய வாடகையை திரும்பப்பெறக்கோரி டெம் போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நுற்றுக் கும் மேற்பட்ட டெம் போக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு டெம்போ வாடகை ரூ.700 மட்டும் ஒட்டுநர்களிடம் வசூலிக்கபட்டு வந்தது . இந் நிலையில் டெம்போ உரிமை யாளர்கள் திடீரென்று நாள் வாடகையை ரூ.700 லிருந்து ரூ.1100 ஆக உயர்த்திவிட்ட னர். இந்த வாடகை உயர் வால் டெம்போ ஓட்டுநர் கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே உரிமையாளர்கள், காவல் துறை அதிகாரிகள்,சிஐடியு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத் தில் முடிவு செய்தபடி நாள் வாடகையை ரூ.850 என உரிமையாளர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ் சாலை எதிரே நடந்த இப் போராட்டத்திற்கு டெம் போ ஓட்டுநர்கள் சங்கத் தின் சிஐடியு தலைவர் சாமி நாதன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.முருகன், நிர்வாகி கள் குணசேகரன், சிவக் குமார், லிங்கேசன் வேலு, மதி ஆகியோர் பேசினர்.
டெம்போ ஓட்டுநர் சங்கச் செயலாளர் ரமேஷ், ராnஐந்திரன்,சுந்தரராஜ் உள்ளிட்ட திரளான ஓட்டு நர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன் னதாக பாரதி பஞ்சாலை யில் இருந்து முதலியார் பேட்டை வழியாக ஊர் வலம் நடைபெற்றது.

Leave A Reply