காபூல், பிப்.27 –
கடந்த ஒருவாரமாக அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப் பாட்டத்தை ஒடுக்குவதற் காக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கக் கைப் பாவை அரசு மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலுக்கு 30 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்கப் படைகள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்த தாகத் தகவல்கள் வெளியா கின. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் லட் சக்கணக்கான மக்கள் அன் றாடம் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்கள். சில பகுதிகளில் அமெரிக்க எதிர்ப்பை ஒடுக்குவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையால் ஆர்ப் பாட்டக்காரர்கள் காய மடைந்துள்ளனர். ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தக வல்கள் வெளியாகி வரு கின்றன.
குர்ஆனை எரித்த அமெரிக்கப் படைகளுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை என்று கொதிப் போடு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற் கிடையில், பிரான்ஸ் நாட் டின் போர் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவை போட்ட குண்டு களுக்கு மூன்று அப்பாவி மக்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதல் மக்களின் கொதிப்பை அதிகப்படுத்தி விட்டது. மேலும், மக்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்க படை முகாம் மீது தாக்கு தல் நடந்ததாக ஒரு செய்தி யைப் பரப்பி விட்டுள்ளார்கள்.
2001 ஆம் ஆண்டு ஆப் கானிஸ்தானில் ஆக்கிரமிப் பை நடத்திய அமெரிக்கா, ஆயிரக்கணக்கான ராணு வத்தினரை நிறுத்தியும் அங்கு அமைதியைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் போரின் விளைவாக ஆயி ரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை கள் என்று அப்பாவிகள் பலியாகி வருகிறார்கள். தலிபான் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட தற்போது அதிகமான பாதுகாப்பின் மையை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
புதிதாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்க ளைக் கட்டுப்படுத்த முயலா மல், அதை அதிகரிக்கும் முயற்சியில்தான் பொம்மை அரசான கர்சாய் அரசு ஈடு பட்டிருக்கிறது. குர் ஆனைக் கொளுத்திய அமெரிக்கா வுக்கு சாவுமணி என்ற முழக்கங்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றுள்ள மக்களிடமிருந்து எழுந்து வருகின்றன. குர் ஆன் எரிப்பு, அருகில் உள்ள மற்ற நாடு களிலும் கடும் கொந்தளிப் பை ஏற்படுத்திவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.