ஈரோடு, பிப். 27-
ஈரோடு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு அளிக்கப்ப
டுகிற கலை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கலைப்பண்புகளை மேம்படுத்
தும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும், ஆட்சியர் தலைமையில் பண்பாட்டுத்துறையின் சார்பில் விருதுகள் அளிக்
கப்படுகின்றன. இவ்வாண்டுக்கான (2011-12) விருது
கள் வழங்கிடுவதற்கான தேர்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலை இளமணி விருதிற்கு குரலிசை கலைக்காக ஆர்.சேஷநாராயணன், நடனத்துறைக்கு செல்வி கனிஷ்கா, கலை வளர்
மணி விருதிற்கு தவில் கலைஞர் சி.அருள்முருகன் மற்றும் சர்மிதா, கலை சுடர்மணி விருதினை தெருக்கூத்து கலைஞர் வீ.மகாலிங்கம் மற்றும் தேவார இசைக்கலைஞர் இரா.ஞானபிரகாசம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், கலை நன்மணி விருதிற்கு கிராமிய கலைஞர் எம்.தங்கவேல் மற்றும் ஓவியர் வள்ளி நாராயணன், கலை முதுமணி விருதிற்கு நாதஸ்வர கலைஞர் பி.எஸ்.லஷ்மி நரசிம்மன் மற்றும் புலி ஆட்ட கலைஞர் கே.வி.சிவராமன் ஆகியோர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் முனைவர் வே.க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: