இராமநாதபுரம், பிப்.27-
இலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்ட இரா மேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத் தரவு பிறப்பித்தார்.
இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 622 விசைப் படகுகளில் 2500 க்கும் மேற்
ப ட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஞாயிற் றுக்கிழமை அதிகாலையில் கச் சத்தீவு அருகே இந்திய கடல் பகு தியில் மீன் பிடித்துக்கொண் டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி யடித்துள்ளனர். மேலும் ஜெய சிங், சகாயம், ஜீவாவாசன் உட் பட 5 விசைப்படகுகள் அதில் இருந்த தோமஸ், மிட்டல், முரு கேசன், ரமேஷ், ஜேருமஸ், யோவான், கில்டோஸ், செல் லையா, சகாயம், மில்லர், ஜான் போஸ் உட்பட 22 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர்.
கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் தலை மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தலைமன்னார் காவல்துறை யினர் 22 மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது. இலங்கை கடற்படையினர் 5 படகுகளை யும் அதில் இருந்த 22 மீனவர் களையும் சிறைபிடித்து தலை மன்னார் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் திங்களன்று (பிப்ரவரி 27) காலை யில் தலைமன்னார் நீதிமன்றத் தில் 22 மீனவர்கள் ஆஜர்ப்படுத் தப்பட்டனர். அதன் பின்பு அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply