குமரி மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்கள்
இன்று வேலைநிறுத்தம்
நாகர்கோவில், பிப். 27-
குமரி மாவட்ட பீடித் தொழிலாளர் சங்க நிர்வா கிகள் கூட்டம் தலைவர் செபஸ்தியாயி தலைமை யில் பரசேரியில் நடை பெற்றது.
கூட்டத்தில் வருங் கால வைப்புநிதி ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய – மாநில அரசு களை வலியுறுத்தியும் பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தத்தில் பீடித் தொழி லாளர்கள் கலந்து கொள் வது என்றும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகி கள் சுஜாமெர்லின், சத் தியநேசன், சுகந்தி, நாதன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.
/////////
அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி, பிப். 27-
நெல்லையில் தற் போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், மக்கள் குளிர்ச்சியான இட ங்களை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக குற்றாலம் அருவிகள், பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதி கரித்துள்ளது.
தமிழகத்தில் கோ டைக் காலம் துவங்குவத ற்கு முன்பே நெல்லை மா வட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள் ளது. இதனால் குற்றாலத் தில் உள்ள ஐந்தருவி, மெ யினருவி, பழையகுற்றா லம், புலியருவி போன்ற அருவிகளுக்கு சுற்றுலா வாசிகளின் வருகை அதி கரித்துள்ளது.
இதுதவிர பாபநாசத் தில் உள்ள பாணதீர்த்தம் அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, திருக்குறுங்குடி ஆகிய அருவிகளுக்கும் சுற்றுலா வருவோர் அதிகரித்துள்ளனர்.
களக்காடு, தலை யணை, கோதையாறு போ ன்ற இடங்களிலும் சுற்று லாப் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்துள் ளது.
/////////
மின்தடை அறிவிப்பு
குழித்துறை, பிப்.27-
மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் பிப்ரவரி 29-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை காப்புக்காடு, மார்த்தாண்டம், காஞ்சிர கோடு, விரிகோடு, கொல் லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணா மலைக் கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக் குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டு வெந்தி ஆகிய இடங்களு க்கும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் தடை அறிவிக்கப் பட்டு உள்ளது.
மேற்குறிப்பிட்ட நேர த்தில் மின் கம்பங்களுக் கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற பொதுமக்கள் ஒத் துழைப்பு தருமாறு குழித் துறை செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: