புதுதில்லி,பிப். 27 –
இந்திய வரலாற்றில் முதல்முறை யாக அனைத்து மத்திய தொழிற்சங் கங்களும் கூட்டாக பங்கேற்கும் மிகப் பிரம்மாண்டமான தொழிலாளர் பொது வேலைநிறுத்தம் பிப்ரவரி 28 செவ்வாயன்று நடைபெற இருக்கிறது.
நெருக்கடியின் அடி ஆழத்தில் சிக் கித்திணறிக்கொண்டிருக்கிற முத லாளித்துவத்தைப் பாதுகாக்க, உலகம் முழுவதிலும் ஆளும் வர்க்கங்கள் உழைப்பாளி வர்க்கத்தின் மீது வர லாறு காணாத தாக்குதலை கட்ட விழ்த்துவிட்டுள்ளன. இதே திசை வழியில் இந்தியாவிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொழிலாளி வர்க்கத் தின் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த அரசால் மிகவும் தீவிரமாக அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக்கொள்கைகள், அனைத்து தரப்பு உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளை யும் பறித்து வருகிறது. இத்தகைய மக் கள் விரோத – தேசவிரோத கொள் கைகளை காங்கிரஸ் தலைமை யிலான அரசு உடனடியாக கைவிட வேண்டுமென இந்தியத் தொழிலாளி வர்க்கம், இன்றைய வேலைநிறுத்தத் தின் மூலமாக எச்சரிக்கை விடுக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 13 பொது வேலைநிறுத்தங்களை இந் தியத் தொழிலாளி வர்க்கம் நடத்தி யிருக்கிறது. சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங் கள் தலைமையேற்று நடத்திய இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட் டங்களில் லட்சோபலட்சம் தொழி லாளர்கள் நாடு முழுவதிலும் பங் கேற்றார்கள் என்பது வரலாறு.
செவ்வாய்க்கிழமையன்று நடை பெற இருப்பது 14வது பொது வேலை நிறுத்தமாகும். முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க மான ஐஎன்டியுசி முழுமையாக பங் கேற்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைமை யில் இயங்குகிற பாரதிய மஸ்தூர் சங்கமும்(பிஎம்எஸ்) பங்கேற்கிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இடது சாரி கட்சிகள் உள்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரே குரலுடன், உரத்த முழக்கத்துடன் அணிதிரண்டிருப்பது இதுவே முதல்முறை. எனவே இந்த பொது வேலைநிறுத்தம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்திராததாக இருக்கும்.
நாட்டின் தொழிலாளி வர்க்கத்தில் 95சதவீதம் பேராக இருக்கும் முறை சாரா தொழிலாளர்கள் முழுமையாக இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற் கிறார்கள். கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சுமைப் பணித் தொழிலாளர்கள், காப்பி, ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், சாலையோர வியா பாரிகள், சிறுகடை தொழிலாளர் கள், விவசாயத் தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள் என பல்வேறு தரப்பு தொழிலாளர்களும் முழுமை யாக பங்கேற்கின்றனர்.
அணிதிரட்டப்பட்ட துறை களைச் சேர்ந்த அனைத்து சங்கங் களும் இந்தப் பொதுவேலைநிறுத் தத்தில் பங்கேற்கின்றன. அனைத்து மத்திய அரசுத்துறை ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர் கள், வங்கி, தொலைத்தொடர்பு, சாலைப் போக்குவரத்து, துறைமுகம், மருந்து விற்பனை பிரதிநிதிகள், சுரங்கத் தொழிலாளர்கள் உள்பட அனைத்துவிதமான உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கமும் பொதுவேலைநிறுத்தத்தில் முழுமை யாக பங்கேற்கிறது.
நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரத்தின் மீது மிகக்கொடூரமான தாக்குதலாக எழுந் துள்ள விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த, பொதுவிநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும்; முறைசாராத் தொழிலா ளர்களின் சமூகப் பாதுகாப்பையும், பணிப்பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்தும் விதத்தில் தேசிய நிதியத்தை உருவாக்க வேண்டும்; பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்க வேண்டும்; தொழி லாளர் சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியா ருக்கு தாரைவார்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும்; அனைத்து தொழி லாளர்களுக்கும் மாதம் குறைந்த பட்சக் கூலி ரூ.10,000 என நிர்ணயிக் கப்பட வேண்டும் அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து காண்ட் ராக்ட் தொழிலாளர்களுக்கும் சம மான கூலி மற்றும் பலன்கள்; சங்கம் அமைப்பதற்கான உரிமை; போனஸ் உச்சவரம்பை நீக்குதல் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ உள்ளிட்ட வசதிகள் உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த மகத்தான வேலைநிறுத் தம் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: