சென்னை, பிப். 26-
பிப்ரவரி 28 அகில இந் திய பொது வேலை நிறுத் தத்தில் தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத் தில் பணியாற்றும் ஊழியர் கள் முழுமையாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிறன்று (பிப். 27) மதுரையில் நடைபெற் றது.
மாநிலத்தலைவர் தி.கண் ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ந.குரு சாமி வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் முருக. செல்வராசன் வேலை யறிக்கை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் ச. மோசஸ் வரவு-செலவு அறிக்கை வாசித்தார்.
வேலை நிறுத்த உரி மையை அரசியல் சட்டப் பூர்வமான உரிமையாக்கிட வேண்டும். புதிய தன்பங் கேற்பு (ஊளு) ஓய்வூதியத் திட் டத்தினைக் கைவிட வேண் டும். தேசிய மொத்த உற்பத்தி யில் கல்விக்கு 6 சதம் நிதி ஒதுக்கீடு செய்திட வேண் டும். வங்கி காப்பீடு துறை களில் நேரடி அந்நிய முத லீட்டினைக் கைவிட வேண் டும். விலைவாசி உயர்வி னைக் கட்டுப்படுத்திட வேண் டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை மத் திய, மாநில அரசுகள் நிறை வேற்றிட வலியுறுத்தி பிப்ர வரி 28ஆம் தேதி நடக்க விருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமை யாகப் பங்கேற்று வெற்றி கரமாக்குவது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் 10வது மாநிலத் தேர் தலை மார்ச் 11 அன்று திண் டுக்கல் நகராட்சி அலுவல கம் அருகில் உள்ள சகாய மாதா மக்கள் மன்றத்தில் நடத்துவது. இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாட் டினை மே 17, 18, 19ஆம் தேதி களில் கன்னியாகுமரியில் நடத்திடுவது.
மாணவர்களின் கல்வி நலன் கருதி 1054 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 1597 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை பதவி உயர்வின் வழியில் உடன் நிரப்பிட வேண்டுமாய் தொடக்கக் கல்வி இயக்குநரை கேட்டுக் கொள்வது. மாநில அளவி லான ஆசிரியர் குறை தீர்க் கும் கூட்டத்தினை தமிழ் நாடு தொடக்கக்கல்வி இயக்கு நர் உடன் கூட்டிட வேண் டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் வே. சுப்ரமணியன் வெ.நீலமே கம் மாநிலச் செயலாளர்கள் மூ.மணிமேகலை சி.பாலச் சந்தர் சி.அ.முருகன் உள் ளிட்டு மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாநிலச் செயற்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர். மாநிலத் துணைத்தலைவர் டி.ராஜேஸ்வரி நன்றி கூறி னார்.
சிவில் சப்ளை ஊழியர்கள்
தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பிப். 28 வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுமை யாக பங்கேற்க முடிவு செய் துள்ளனர்.
வேலை நிறுத்த கோரிக் கைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண் டலங்களிலும் வாயிற் கூட் டம் நடைபெற்றது. கூட் டத்தில் மாநிலத் தலைவர் வி.குமார், பொதுச் செயலா ளர் இ.சண்முகவேல், பொரு ளாளர் புவனேஸ்வரன், உத விப் பொதுச் செயலாளர் கள் எம்.ஏழுமலை, சந்திர சேகரன் உட்பட மாநில நிர்வாகிகளும், மண்டல செயலாளர்களும் பங்கேற்ற னர். ஒவ்வொரு மண்டலத் திலும் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைத்து உழைப்பாளிகளும் பயன் பெற கூடிய வகையில் ஓய் வூதியம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் தொழி லாளர்கள் மத்தியில் உற் சாகத்தை உருவாக்கியுள்ளது.
அனைத்து தொழிற்சங் கள் சார்பில் செவ்வாயன்று (பிப். 28) நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட் டத்தில் அனைத்து ஊழியர் களும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவர் வி.குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித் துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.