நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து இன்று (28.2.2012) அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன. இந்தப் அறப்போர் முழு வெற்றிபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஆலைத் தொழிலாளர்கள் முதல் சுமைப்பணித் தொழிலாளர்கள் வரை, முறைசார் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் அனைவரும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள், காப்பீட்டு உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர்கள், மத்திய -மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே மற்றும் பஸ் போக்குவரத்து ஊழியர்கள் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித் துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் மற்றும் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிப்பது உறுதியாகியுள்ளது. ஆட்டோத் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சார்ந்த அமைப்பு களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளன.
நாடு விடுதலைப் பெற்ற பிறகு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து ஒற்று மையாக அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தமாகும் இது. காங்கிரஸ் கட்சித் தலை மையிலான ஐஎன்டியுசி மற்றும் பாஜக தலை மையிலான பிஎம்எஸ் தொழிற்சங்கங்களும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத் துள்ளன.
பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் நவீன தாராளமயமாக்கல் கொள்கை இந்தியா வில் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 20 ஆண்டுகளில் இந்த கொள்கைகள் நாட்டின், மக்களின் முன் னேற்றத்திற்கு உதவியது என்று ஒரு அம்சத் தைக் கூட சுட்டிக்காட்ட முடியாது.
ஆனால் தீய விளைவுகள் என்று ஆயிரம் ஆயிரம் விளைவுகளை, விபரீதங்களை சுட்டிக் காட்ட முடியும். விலைவாசி உயர்வு, வேலை யின்மை, வறுமை, சமச்சீரற்ற வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் பயன்கள் எளிய மக்களுக்கு எட்டாமல் பணக்காரர்களை நோக்கி பாயும் நிலை என மக்களை பாதிக்கும் காரணங்கள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் பென்சன் நிதி சூறையாடல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் ஒட்டச்சுரண்டுவது, பொதுத்துறை நிறு வனங்களுக்கு மூடுவிழா, பன்னாட்டு நிறுவனங் களுக்கு சலுகை மழை என்பது தான் தாராளமய மாக்கல் கொள்கையால் நாடு கண்ட பலன்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் சட்டவிரோத கறுப்புப்பணம் லட்சம் கோடி களில் குவிகிறது. மறுபுறத்தில் நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 31 ரூபாயும், கிராமப்புறத்தில் 26 ரூபாயும் செலவிடுபவர்கள் வறுமைக்கோட்டை தாண்டி தாவிக்குதித்துவிட்டதாக சாதிக்கிறது திட்டக்குழு. ஏழைகளுக்கும் பணக்காரர் களுக்குமான இடைவெளி விரிந்து கொண்டே போகிறது.
இந்த கொள்கைகளை எதிர்த்து முறியடிக்கக் கூடிய பேராற்றல் தொழிலாளர் வர்க்கத்திற்கே உண்டு. அவர்களுக்கு ஆதரவாக இந்திய திருநாடே அணிவகுத்து நிற்கிறது. இன்றைய வேலைநிறுத்தத்தின் வெற்றி தேசத்தின் வெற்றி யாகும். தேசத்தின் பின்னால் அனைவரும் அணிதிரள்வோம்!

Leave A Reply

%d bloggers like this: