ஆஸி. தலைமைப் போட்டியில் கில்லர்ட் வெற்றி
மெல்போர்ன், பிப். 27 –
ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லர்ட், ஆஸி. தொழிற்கட்சிக்குள் நடந்த தலைமைப் போட்டியை அழுத்தந் திருத்தமாக வென் றார். அவருடைய நெடு நாள் எதிரியான கெவின் ரூடை அவர் 71-31 என்ற வாக் குகளில் தோற்கடித்தார்.
தொழிற்கட்சி ஆட்சிக் குழுவில் 103 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் பிரதமர் நாற்காலி யைப் பிடித்துவிடலாம் என்று கெவின்ரூட் வைத் திருந்த நம்பிக்கையை ஆஸி.யின் முதல்பெண் பிரதமர் ஜுலியா கில்லர்ட் தகர்த்துவிட்டார். கடந்த 30 ஆண்டுகளில் உட்கட்சி தேர்தல்களில் கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது.
தொழிற்கட்சியின் ஐக்கி யத்தைக் கட்ட பாடுபடப் போவதாக தேர்தலுக்குப் பின் கெவின்ரூட் கூறினார்.
//அடுத்த செய்தி//
மணிப்பூர் மோதலில் தீவிரவாதி பலி
இம்பால், பிப். 27 –
மணிப்பூரின் இம்பால் மேற்குமாவட்டத்தில் காவல்துறைக்கும், தீவிர வாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு தீவி ரவாதி கொல்லப்பட்டார்.
மணிப்பூர் பல்கலைக் கழகம் அருகில் உள்ள காஞ் சிப்பூரில் சந்தேகத்துக்குரிய வகையில் இருவர் நடமாடு வதாக தகவல் வந்தவுடன் காவல்துறையும் அசாம் துப்பாக்கிப் படையினரும் இணைந்த பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தனர். சந்தேகத்துக்குரிய இருவ ரையும் நிற்கும்படி இவர் கள் கூறினர்.
அவர்கள் இருவரும் உடனே துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதை யடுத்து நடந்த மோதலில் இருவரில் ஒருவர் கொல் லப்பட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்தில் கிடந்த 9மி.மீ. கைத்துப்பாக்கி கைப்பற் றப்பட்டது.
//அடுத்த செய்தி//
ம.பி.யில் போலி
மருத்துவர்கள் கைது
சியோனி, பிப். 27 –
முறையான பதிவு இன்றி மருத்துவமனை ஒன்றை கூட்டாக நடத்திவந்த பர்த் குமார் சின்கா, தினேஷ் சோனி ஆகிய இருவரை யும் காவல்துறை கைது செய்தது. தேசிய நெடுஞ் சாலை 7ன்மேல் கட்டப் பட்டுள்ள சப்பாரா மேம் பாட்டு வட்ட தலைமை யகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் வெகு நாட்களாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதையடுத்து மாவட்ட மருத்துவமனை அவர்கள் சமர்ப்பித்த ஆவணங் களைச் சோதித்தது. அவர் களிடம் முறையான பதிவுச் சான்றிதழ் இல்லை. அதை யடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டனர்.
//அடுத்த செய்தி//
மருத்துவமனை வளாகத்தில்
கையெறி குண்டு
இம்பால், பிப். 27 –
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள மருத்துவ விஞ்ஞானம் மற் றும் மருத்துவமனை பிராந் திய கல்விக்கழகத்தின் வளா கத்தில் சக்திமிக்க கையெறி குண்டு காணப்பட்டது.
அவசர நிலை வளாகத் தின் அருகே கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஹிந்தி தெரிந்த அடையா ளம் தெரியாத தீவிரவாதி கள் குண்டுகளை அமைச் சர்கள் வீட்டின் முன் வைத் தனர்.
கண்டெடுக்கப்பட்ட குண்டின் அருகே இருந்த சிறுதொகுப்பில் அவர்களு டைய கோரிக்கை நிறை வேறும்வரை சமரசம் கிடையாது என்று எழுதப் பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: