லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.27-
பிரெஞ்சு மௌன நாடகமான “தி ஆர்ட்டிஸ்ட்” படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது. சிறந்த நடிகையாக மெரில் ஸ்ட்ரீப் தேர்வு செய்யப்பட்டார்.
ஹாலிவுட்டின் துவக்க நாட்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் இயக்குநர் மிக்கேல் ஹசனா விசியாசின் “தி ஆர்ட்டிஸ்ட்” கறுப்பு -வெள்ளை படம், 83 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்கார் விருது வென்ற முதல் மௌனப்படம் என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன்னர் 1929ம் ஆண்டு ‘விங்ஸ்’ என்ற மௌனப் படம் ஆஸ்கார் விருதை பெற்றது.
ஹியூகோ படம் தொழில்நுட்ப ரீதியில் 5 ஆஸ்கார் விருதுகளை பெற்றது. பிரிட்டிஷ் முன்னாள் பிரதமரான மார்க்ரெட் தாட்சர் கதாபாத்திரமாக அயர்ன் லேடி (இரும்புப் பெண்) படத்தில் நடித்ததற்கு நடிகை மெரிலுக்கு ஆஸ்கார் சிறந்த நடிகை விருது கிடைத்தது.
பாகிஸ்தானின் ஆவணப்படமான ‘சேவிங் பேஸ்’ சிறந்த குறும்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த அயல்நாட்டுப்பட வரிசையில் ஈரானின் ‘ஏ செப்ரேஷன்’ ஆஸ்கார் விருதை வென்றது. இஸ்ரேல், பெல்ஜியம், போலந்து, கனடா குறும்படங்களை வீழ்த்தி இந்தப் படம் விருது வென்றது.
ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில் இந்திய இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: