கோவை, பிப். 26- கோவையில் மின்சார பற்றாக்குறை போக்க 20 ஆயிரம் சோலார் மின் விளக்குகள் அமைக்கப் படவுள்ளன. தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை அதிகரித் துள்ளதால் (சேலார்) சூரிய மின் திட்டத்தை செயல் படுத்த அரசு உத்தரவிட்டுள் ளது. இதனைத்தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட மலை கிராமங் களில் 2 ஆயிரம் சோலார் மின் விளக்குகள் அமைக் கப்படவுள்ளன. மாநில அளவில் 20 ஆயிரம் தெரு மின்விளக்குகள் அமைக் கப்படும். இதற்கான இறுதி டெண்டர் மார்ச் 16ம் தேதி செய்யப்பட்டுள்ளது. இத னால் பசுமை வீடு திட்டத் தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5 ஆயி ரம் வீடுகளில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப் படவுள்ளன. இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை மற்றும் எரிசக்தி மேம்பாட்டு நிறு வன அதிகாரிகள் கூறுகை யில்: சோலார் மின் விளக்கு திட்டத்தில் பசுமை வீடு களில் சிறு குழல் விளக் குகள் பயன்படுத்தப்படும். வீடுகளில் 20 வாட்ஸ் திறன் உள்ள விளக்குகள் அமைக் கப்படும். சோலார் தெரு விளக்கு திட்டத்தை டெண் டர் எடுக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் பராமரித்து, செயல்படுத்த வேண்டும். மேலும் வன விளங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள மலை கிராமங்களில் சோலார் விளக்குகள் பய னுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.