ஈரோடு, பிப். 26 – ஈரோடு அருகே 10 நாட் களுக்கு ஒரு முறை தண் ணீர் வழங்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட் சிக்கு உட்பட்ட 18 மற்றும் 19-வது வார்டு பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார்டுகளுக்கு உட் பட்ட மாணிக்கம்பாளை யம், முனியப்பன் கோவில் வீதி, அத்திக்காடு, ராம் நகர், சக்திநகர், கிழக்குகாடு, அம்மன் நகர், தச்சன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தெருக்குழாய் மூலம் தண் ணீர் பிடித்து வந்தனர். இந் நிலையில் கடந்த 10 நாட் களாக தண்ணீர் விநியோ கிக்கப்படவில்லை. இத னால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். இது குறித்து மாநக ராட்சி மண்டல உதவி ஆணையாளரிடம் அப்ப குதி மக்கள் புகார் தெரி வித்தனர். ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதிமக்கள் மாணிக் கம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் பொதுமக்களி டையே சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள் தெரிவிக்கையில்: எங்கள் பகுதிக்கு 2 நாட் களுக்கு ஒருமுறை தண் ணீர் வழங்கப்பட்டு வந் தது. ஆனால் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கு வதோடு, ஒரு மணி நேரத் திற்கு மட்டும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இத னால் போதுமான குடிநீரி ன்றி நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக அதிகாரி கள் விரைவில் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த னர். பின்னர் அங்கு வந்த 2-ம் மண்டல உதவி ஆணையா ளர் பொது மக்களிடையே சீராக குடி நீர் மற்றும் தண்ணீர் வழங்க நடவ டிக்கை மேற்கொள் ளப் படும் என தெரிவித்ததை யடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: