திருப்பூர், பிப். 26- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், மாநில அரசு கடன் திட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபாரத் தொழிலுக்கு ரூ. 1 லட்சம் கடன் வழங்கப்படும். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வய துக்கு மேற்பட்ட தனிநபர் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள், சிறப்பு பிரி வினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். திட்ட மதிப்பில் பொதுப்பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் வழங்கப்படும். இக்கடனுக்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. இதற்கு மாநில அரசு 15 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. இதற்கான விண் ணப்பம் மற்றும் ஆவண இணைப்புகள், தொழில் திட்டங்கள், றறற.னiஉவசைரயீரச.உடிஅ என்ற வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். இத்திட்டத்தின் கீழ் வட்டார வாரியாக நேர்காணல் நடத்தப்படுகிறது. இதுவரை ஆறு வட்டாரங்களில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, வரும் 27ம் தேதி ஊத் துக்குளி மற்றும் மடத்துக்குளத்திலும், 28ம் தேதி குடிமங்கலம் மற்றும் அவிநாசியிலும், 29ம் தேதி உடுமலை மற்றும் மூலனூர், மார்ச் முதல் தேதி திருப்பூர் ஒன்றிய அலுவலகத்திலும் நேர்காணல் நடக்கிறது. காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டமும், தொடர்ந்து நேர்காணலும் நடைபெறவுள்ளது. தொழில் முனைவோர் சந்தை வாய்ப்புள்ள மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய மதிப்பு கூட்டிய பொருள் உற்பத்தி தொடர்பான நவீன திட்டங்களை தேர்வு செய்து, பயன் பெறலாம்.

Leave A Reply

%d bloggers like this: