நாகப்பட்டினம், பிப். 26- காவிரி தண்ணீரின் மூலம் பலன் பெறும் கடைமடைப் பாசனப் பகுதி யான நாகப்பட்டினம், தீண்டாமை ஒழிப்பு, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் நலன்களுக்காக போராடி செந்நீர் சிந்தியதில் தலை மடைப்பகுதி என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட் டுப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: வெண்மணியில் நடைபெற்ற போராட்டம் கூலி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல. இது எங் கள் செங்கொடி, இது எங்கள் சங்கம் என்பதற்காக நடைபெற்ற போராட் டமுமாகும். தீண்டாமைக் கொடுமை தமிழகத் தில் இன்றைக்கும் உள்ளது. தலித் ஊராட்சித்தலைவர் தனக்கான நாற் காலியில் அமரமுடியவில்லை. தலித் தலைவர் ஊராட்சியில் கொடியேற்ற முடியவில்லை. இது மட்டுமல்ல, தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது. ஹூண் டாய், போர்டு போன்ற நிறுவனங்கள் சங்கம் அமைக்கக்கூடாது என்கின் றன. சங்கம் வைப்போம் என்று போரா டியதற்காக கைகளில் விலங்கு பூட்டி யது அரசு. பயன்படாத ஏரி, குளங்களை வகை மாற்றம் செய்து ஏழை மக்களுக்கு பட்டா வழங்குங்கள் எனக்கேட்டால், சட்டமன்றத்தில் ஏட்டிக்கு போட்டி யாக பதிலளிக்கிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம், விழுப்புரம் பேருந்து நிலையம் போன்றவை ஏரியில் தானே கட்டப்பட்டுள்ளது. அரசுக்கு ஒரு நீதி, ஏழை மக்களுக்கு ஒரு நீதியா? அரசு தாமதமின்றி பயன்பாடற்ற ஏரி, குளங் களை வகைமாற்றம் செய்து, ஏழைமக் களுக்கு பட்டா வழங்க வேண்டும். பேருந்துகட்டணம், பால் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். பேருந்து கட்டண உயர்வால் பலன் பெற்றுள்ளது முதலாளிகள் தான். தமிழகத்தில் 6 தனியார் பால் பண் ணைகள், நூற்றுக்கணக்கான தனி யார் கல்வி நிறுவனங்கள் முளைத்துள் ளன. நவீன தாராளமயக்கொள்கை யால் பெருமுதலாளிகள் தான் பலன டைந்துள்ளனர். ஏழைகளின் துன்பம் அதிகரித்துள்ளது. மின்வெட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. சென்னையில் உள்ள அந்நிய நிறுவனங்கள், பெருமுதலாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படு கிறது. அதே நேரத்தில் கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் இத னால் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. சீரான தங்கு தடையற்ற மின்சா ரம் கேட்டுப் போராடுபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்துகின்றனர். கடும் மின்வெட்டால் சிறு உற்பத் தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலையிழந் துள்ளனர். சிறு உற்பத்தியாளர்கள் ஜெனரேட்டர் வைத்துள்ளனர். அவர் களுக்கு 1 லிட்டர் டீசலை 4 ரூபாய்க்கு மானியமாக வழங்கவேண்டும். தமிழகம் மின்வெட்டால் இருண்டு போய் உள்ளது. அரசு வழங்கும் இல வச மிக்சி, கிரைண்டரை பயன்படுத்து வதற்கு மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழ்வது எப்படி என தமிழக அரசு சொல்லிக் கொடுக் கிறது. இலவச மிக்சி, கிரைண்டருக்கு பதில் அரசு இலவசமாக இன்வெர்ட் டர் வழங்கவேண்டும். மத்திய-மாநில அரசுகளின் தவ றான கொள்கைகளுக்கு எதிராக பிப் ரவரி 28ம் தேதி நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்தை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள், தொழிலாளி வர்க்கம் என அனைத்து தரப்பு மக்களும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசி னார்.

Leave A Reply

%d bloggers like this: