பெங்களூர், பிப். 26 – நாற்பது வயதிலும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று கேரள வீராங்கனை அல்லே குரிய கோஸ் நிரூபித்துள்ளார். பெங்களூர் ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மூத்தோர் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பங்கேற்ற 40 வயதான அல்லே குரியகோஸ் மூத்தோர் போட்டிகளில் இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் இவர் மும்மடித் தாண்டல் (கூசுஐஞடுநு துருஆஞ) உயரந்தாண்டுதல் ஆகியவற்றில் 17 ஆண்டுகளாக நீடித்து வரும் சாதனைகளை முறி யடித்துள்ளார். உயரந்தாண்டலில் 1995ம் ஆண்டில் காளந்தி அகாசி படைத்த 1.29 மீட்டர் உயரத்தை இவர் முறியடித்துள் ளார். குரியகோஸ் 1.31 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாத னையைப் படைத்துள்ளார். அதேபோல் மும்மடித் தாண்ட லிலும் இவர், அதே ஆண்டில் காளந்தி நிறுவிய 9.70மீ தூரத்தை, 10.70மீ தாண்டி முறியடித்தார். மாநிலப்போட்டியில் 10.01மீ தாண்டியதால் இங்கு புதிய சாதனை படைக்க முடியும் என்று நம்பிக்கை யுடன் களமிறங்கியதாக இவர் கூறினார். நீளந்தாண்ட லிலும் முதலிடம் பெற்ற இவர், மூத்தோர் போட்டியில் மூன்று தங்கங்களை வென்றுள்ளார். எண்பது வயதுக்கு மேலானோர் போட்டியில் தமிழகத்தின் டெய்ஸி விக் டர் குண்டு எறிதலிலும், மும்மடித் தாண்டலிலும் தங் கம் வென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.