கொல்கத்தா, பிப்.26 – மேற்குவங்கத்தின் பாராநகர் பகுதியில் இரண்டு பேரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நடுத்தர வயதுப் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். கொல்கத்தா நகரில் ஒரு பெண் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 24-பர்கானா மாவட்டத்தின் பாராநகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர் முனியா தாஸ். குப்பைக் காகிதங்கள் சேகரிக்கும் தொழில் செய்துவந்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாய். ஒரு பாலத்திற்கு அருகில் நினைவிழந்த நிலையில் கிடந்த முனியா தாஸை, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறைக்கும் தகவல் அனுப்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்த தாஸ், காவலர்களிடம் அளித்த மரண வாக்குமூலத் தில், தன்னை ஒரு லாரி ஓட்டுநரும், உதவியாளரும் மாறி மாறி வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்தார். அவ ரது மகன் ரத்தன் தாஸ் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சஞ்ஜய் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave A Reply