முசிறி, பிப்.26- முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ளது நுகர் வோர் வாணிபக் கழக கட்டிடம். இங்கு விவசாயிகள் தங்கள் தானியங்கள் மற்றும் நெல் மூட்டைகளை கிடங்கில் பாதுகாத்து வைப்பது வழக்கம். ஞாயிறன்று சொரியம்பட்டியைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழி லாளி சின்னசாமி (40) என்பவர் தனது வேலையை முடித்துவிட்டு கிடங்கு பகுதியில் நின்று கொண்டி ருந்த லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந் துள்ளார். அப்போது லாரியின் பின்னால் நிற்கும் கூலித் தொழிலாளி சின்னசாமியை கவனிக்காமல் லாரி டிரைவர் ராமச்சந்திரன் லாரியை பின்புறமாக எடுத் துள்ளார். இதில் கூலித்தொழிலாளி சின்னசாமி படு காயமடைந்தார். முசிறி அரசு மருத்துவமனையில் முத லுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சம்பவம் குறித்து முசிறி இன்ஸ்பெக்டர் ரவிச்சக் கரவர்த்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள் ளார். இறந்து போன சின்னசாமிக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: