கோவை,பிப். 26- மின் வெட்டு இல்லா மல் செய்வதற்கு தமிழக மக்கள் ஒரு வருடம் பொறுத் திருக்க வேண்டும் என்று வேளாண்துறை அமைச் சர் தாமோதரன் தெரி வித்துள்ளார். கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத் தியாளர்கள் சங்கம் ‘கொசிமா’ வின் புதிய அலுவலகத் திறப்பு விழா கடந்த ஞாயி றன்று நடைபெற்றது. கொசிமா தலைவர் ஆர். நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தாமோதரன் கலந்து கொண்டு அலுவல கத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்: இந்த தொழிற் பேட்டை யில் அடிப்படை வசதிக ளான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கென ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடி நீர் பிரச்சனைக்காக இரண் டாவது குடிநீர் திட்டத் தில் இருந்து கூடுதலான நீர் பெறப்படும்.மேலும், தற் போது நிலவி வரும் மின் வெட்டு பிரச்சனையை தீர்க்க முதல்வர் ஆணையிட் டுள்ளார். மேட்டூர் அனல் மின்நிலையம், சென்னை யில் அமைக்கப்படும் மற் றொரு மின்நிலையம் மற்றும் விரைவில் துவங்கப் பட உள்ள காற்றாலை மூலம் மின் உற்பத்தி ஆகி யவற்றின் மூலம் மின் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் ஒரு வருடம் கழித்து தமிழகத்தில் மின் தடையே இல்லாத நிலை உருவாகும். அதுவரை தமிழக மக்கள் பொறுத்தி ருக்க வேண்டும். தொழில்பேட்டையில் திறமையான தொழிலாளர் களை உருவாக்க தொழிற் பயிற்சி நிலையம் கோரி யுள்ளனர். அதற்கான முயற்சிகளும் மேற்கொள் ளப்படும். பெண்களுக் கான தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் அர சிடம் உள்ளது. மேலும் ஈச்சனாரி மேம்பாலம் அமைக்கப்படும்போது, அதற்கான மாற்றுவழி அமைக்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கொடீசியா முன்னாள் தலைவர் ஏ.வி.வரதராஜன், தொழிலதிபர் இயக்காக்கோ சுப்பிரமணியம். கொசிமா முன்னாள் தலைவர்கள் இண்டோசெல் ஜெகதீஸ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, மலுமிச் சம்பட்டி ஊராட்சித்தலை வர் என்.சண்முகம் ஆகி யோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.