சென்னை, பிப். 26- மின்வெட்டால் மாண வர்களின் படிப்பு பாதிக் கப்படக் கூடாது என்பதால் அரசு செலவில் பள்ளி களுக்கு புதிய ஜெனரேட் டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று (பிப். 26) வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலை வர் மற்றும் அதிகாரிகளு டன் கடந்த 17,23ம் தேதி களில் விரிவாக ஆய்வு நடத் தினேன். தற்போது மின் தேவையின் அளவு 11,500 முதல் 12,500 மெகா வாட் என்று உள்ள நிலை யில், மின் உற்பத்தி நிலையங் கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து பெறப்படும் மின் சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள் ளது. 3000 முதல் 4,000 மெகா வாட் வரை மின் பற்றாக் குறை உள்ளது. எனவே, கிடைக்க பெறும் மின்சாரம் குறையும்போது, அறிவித்த தற்கும் மேலான மின்வெட்டு தவிர்க்க இய லாததாகிறது என தெரிவிக் கப்பட்டது. அவ்வாறு முறை யாக அறிவிக்கப்படாத மின் வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன். தற்போதுள்ள இக்கட் டான மின் நிலைமையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற் றும் நுகர்வோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படை யிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் வினியோக கட்டுப் பாட்டு முறைகளை பிப்ர வரி 25 சனிக்கிழமையன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி களுக்கு மின்வெட்டு இல்லா மல் மின்சாரம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இயலாத சூழ் நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகை யில் அரசே ஜெனரேட்டர் களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர் களை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதேபோன்று அரசு உதவி பெறும் மற்றும் தனி யார் மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகள், ஜென ரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ள லாம். அதற்கு ஏற்படும் கூடு தல் செலவை அவர்களுக்கு அரசு ஈடு செய்யும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave A Reply