நாகப்பட்டினம், பிப்.26- ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளாலும் ஊழல்களா லும் நலிவுற்றும் வெறுப்புற்றும் கிடக்கும் மக்களுக்கு மார்க்சியம் ஒன்றே மீட்சி தரும் என்று மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கே.வரத ராசன் முழக்கமிட்டார். பிப்ரவரி 22 முதல் 25 வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு நாகையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவுநாளான சனிக் கிழமை மாலை இரண்டு லட்சம் பேர் பங்குபெற்ற செம்மயமான பிரம்மாண்டப் பேரணி மாநாட் டுப் பொதுக்கூட்டம் முடிகின்ற வரை வந்துகொண்டே இருந்தது. மாபெரும் மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராசன் பேசியதாவது : ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் தாண்டவமாடிய சாதியக் கொடுமைகளை அடித்து நொறுக் கியது செங்கொடி இயக்கம். இத னால்தான் உத்தப்புரம், இன்னும் பிற இடங்களிலும் தீண்டாமைச் சுவர் தகர்ந்து வீழ்ந்தது. தகரம் கண்டுபிடிக் கப்படாததற்கு முன்பே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்ட் டுகள் என்று தி.மு.க.காரர்கள் சொல்வார்கள். உண்மைதான். நாங் கள் உண்டியல் ஏந்தி மக்களிடம் தான் வசூல் செய்கிறோம். ஆந்திராவின் திருப்பதி கோவில் சொத்தின் மதிப்பைவிட, கேரளா வின் பத்மநாபசாமிக் கோயிலில் குவிந்துகிடக்கும் தங்க வைடூரியங் களின் மதிப்பு மிஞ்சி விட்டது. இந்த இரண்டையும் மிஞ்சியது தான் தமிழகத்தைச் சேர்ந்த திமுக வின் ஆ.ராசாவின் 2ஜி ஊழல். மத்திய அரசு உலகமயம், தனி யார்மயம், தாராளமயம் ஆகிய முத லாளித்துவக் கொள்கைகளை அமல்படுத்தும்போதே மார்க் சிஸ்ட் கட்சியின் மறைந்த மகத் தான தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் “இது தேசத்தை கொடிய பாதைக்கு அழைத்துச் செல்லும்’’ என்று கூறினார். அப்போது ஆட்சி யாளர்கள் “இந்தியா சுபிட்சம் பெறும்” என்று கூறினார்கள். இன் றைக்கு இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 2 விவசாயிகள் தற் கொலை செய்துகொள்ளும் நிலை மைதான் இருக்கிறது. இதுதான் இக்கொள்கைகளின் சாதனை. மீன் கதை ஒருவன் கடலில் ஒரு பெரிய மீனைப் பிடித்துத் தொட்டியில் உள்ள நல்ல தண்ணீரில் விட்டான். “ஆகா! என்ன கருணை! உப்புத்தண் ணீரில் இருந்த என்னை நல்ல தண் ணீரில் விட்டிருக்கிறான்’’ என்று மீன் நினைத்தது. பிறகு அந்த மீனைச் சமைப்பதற்காக வெந்நீரில் விட்டபோது, “தண்ணீரிலேயே கிடந்தால் ஜலதோஷம் பிடித்து விடும் என்று வெந்நீரில் விடுகி றான்’’ என்று கூறிக்கொண்டது. வெந்நீர் கொதிக்கக் கொதிக்க மீன் துடிதுடித்து அலறியதுபோல் இன்று தேசத்தின் நிலைமை இருக் கிறது. “ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும். இல் லாவிட்டால் மாட்டின் இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு அடித்துக் கறக்க வேண்டும்” என்று பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியின் அர்த்தம் இப்போது புரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியாளர்களின் தேசவிரோதக் கொள்கைகளை – மக்கள் விரோதச் செயல்களை அடித்து நொறுக்கி, தேசத்தையும் மக்களையும் அழிவிலிருந்து மீட் கும் ஒரே கட்சி. நாகையில் நடைபெற்ற 20வது மாநில மாநாடு புதிய மாற்றுப் பாதையை வகுத்துள்ளது. நம்பிக் கையோடு அந்தப் பாதைக்கு வாருங் கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு கே.வரதராசன் பேசி னார்.

Leave A Reply

%d bloggers like this: