புதுதில்லி, பிப்.26- இளம்பிள்ளை வாதம் (போலியோ) பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் (றுழடீ) விலக்கியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாகப் புதிய போலியோ தாக்குதல் பற்றிய தகவல் எதுவும் பதிவாகாத நிலையில் இந்தியா இந்த நிலையை எட்டியுள்ளது. புதுதில்லியில் சனிக் கிழமையன்று (பிப்.25) நடை பெற்ற உலக அளவிலான ‘போலியோ மாநாடு – 2012’ நிகழ்ச்சியில், பிரதமர் மன் மோகன் சிங் முன்னிலை யில், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஸாத் இதனை அறிவித் தார். இதற்கான கடிதம் சனிக்கிழமை காலையில் தமக்குக் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். போலியோ பரவியுள்ள நாடுகளின் உலக சுகாதார பட்டியலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீ ரியா உள்ளிட்ட நான்கு நாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பட்டியலிலி ருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலியோ இல்லாத நாடு என்ற நிலை யை அடைவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் போலி யோ தாக்குதல் ஏற்படாத நிலையை இந்தியா உரு வாக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நடேலா மெனாப்டே கூறினார். இதற்காகத் தொடர்ச்சி யான நடவடிக்கைகள், அவசரநிலை சமாளிப்பு ஏற் பாடுகள், உடனடி செயல் பாட்டுக்கான திட்டம் ஆகி யவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர். இந்தியாவின் சாதனை யைப் பாராட்டிய பிரதமர், போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பதில் ஈடு பட்ட 23 லட்சம் ஊழியர் களுக்கே இதற்கான பெருமை போய்ச்சேர வேண்டும் என்றார். எளி தில் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள குழந்தை களுக்கும் அவர்கள் தடுப்பு மருந்தை அளித்தார்கள் என் றார் அவர். இந்தியாவி லிருந்து மட்டுமல்லாமல் பூமியி லிருந்தே போலி யோவை ஒழித்துக்கட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என் றும் அவர் கூறினார். இது இந்தியாவின் சாத னை மட்டுமல்ல, உலகளா விய போலியோ ஒழிப்பு இயக்கத் தின் சாதனையு மாகும் என்று மெனாப்டே குறிப்பிட்டார். 2010 நவம்பருக்குப் பிறகு முதல்முறையாக, சுற்றுச் சூழல் தொடர்பான பல ஆய்வுகள், காற்றில் போலி யோ கிருமிகள் பரவிவர வில்லை என்று காட்டியுள் ளன என்றும் அவர் தெரி வித்தார்.

Leave A Reply

%d bloggers like this: